ஆட்டோக்காரருடன் சண்டை போட்டாரா நயன்தாரா?.. தாய் பாசத்தில் கூட்டும் அலப்பறை?.. தீயாய் பரவும் தகவல்

சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஜவானில் நடித்ததற்காக அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Nayanthara Vignesh Shivan

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து அவருடன் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக லிவிங் டுகெதரில் வாழ்ந்தார் நயன். அதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அதனையடுத்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.


பிஸி அம்மா: திருமணம் ஆகி குழந்தைகளை பெற்ற பிறகு நயன்தாரா தொடர்ந்து நடிப்பில் பிஸியாக இருந்துவருகிறார். ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி ஆகிய படங்களில் கடைசியாக நடித்தார். இந்த இரண்டு படங்களில் ஜவான் மட்டும் தேறியது. அன்னபூரணி 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படி பிஸியான நடிகையாக இருந்தாலும் குழந்தைகளுடன் தவறாமல் நேரம் செலவழித்துவருகிறார் அவர்.

வெளிநாட்டு டூர்: சமீபத்தில்கூட தனது கணவர், குழந்தைகளுடன் ஹாங்காங் சென்று வந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துவரும் அவர்; தனது குழந்தைகளே உயிர், உலகமாக வாழ்ந்துவருகிறார். அதனை பார்த்த ரசிகர்களும் நயனுக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அலப்பறை கூட்டும் நயன்?: இந்நிலையில் நயன்தாரா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது நயன் இப்போது சென்னை எழும்பூரில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வசித்துவருவதாக கூறப்படுகிறது. மாலை நேரங்களில் தனது குழந்தைகள் விளையாடுவதற்காக கீழே அழைத்துவருவதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. அப்படி ஒருமுறை அழைத்துவந்து விளையாட வைக்கும்போது ஒரு டெலிவரி பாய் வந்து தான் டெலிவரி செய்ய வேண்டிய நபரிடம் ஃபோனில் பேசிக்கொண்டிருந்ததாகவும்;

அப்போது அங்கே இருந்த நயன், என்ன குழந்தைகள் விளையாடுறாங்க இப்படி சத்தமா பேசிட்டு இருக்கீங்க என கத்தியதாகவும்; அதேபோல் ஒரு முறை ஆட்டோக்காரர் ஒருவர் சவாரிக்காக அந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தபோது, ஹலோ குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் ஏன் இவ்வளவு ஸ்பீடா வரீங்க என்று கேட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் தாய் பாசம் இருக்கலாம்; ஆனால் அந்தப் பாசம் மற்றவர்களை டார்ச்சர் செய்யக்கூடாது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X