ஹாலிவுட் போகப் போவது நயன்தாராவா, அனுஷ்காவா?
சென்னை: ஹாலிவுட் படத்தில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டில் முன்னணி நாயகியாக இருப்பவர் நயன்தாரா. டோலிவுட்டிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழி ரசிகர்கள் மனதில் இருப்பவர் அனுஷ்கா.
இது எங்களுக்கு தெரியாதா, இப்பொழுது என்ன சொல்ல வருகிறீர்கள் என்கிறீர்களா?

பாலிவுட்
கோலிவுட், டோலிவுட்டில் நடிக்கும் நடிகைகள் பாலிவுட் செல்ல விரும்புவார்கள். ஆனால் நயனும் சரி, அனுஷ்காவும் சரி பாலிவுட் செல்ல துடிக்கவில்லை.

ஹாலிவுட்
இப்படி கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியாக இருக்கும் நயன்தாராவுக்கும், அனுஷ்காவுக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஆனால் இருவருக்கும் அல்ல இருவரில் ஒருவருக்கு தான் ஹாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

எக்ஸ்பென்டபிள்ஸ்
எக்ஸ்பென்டபிள்ஸ் ஹாலிவுட் படத்தை எடுத்தவர்களின் புதுப்படத்தில் 7 நாடுகளைச் சேர்ந்த நாயகிகளை நடிக்க வைக்கிறார்கள். இந்தியாவில் இருந்தும் ஒரு நாயகியை தேர்வு செய்கிறார்கள்.

அனுஷ்கா, நயன்
அந்த ஒரு இந்திய நாயகியாக அனுஷ்கா அல்லது நயன்தாராவை தேர்வு செய்ய உள்ளனர். இதில் யாருக்கு ஹாலிவுட் வாய்ப்பு கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











