குத்திய பச்சையை அழிக்க பாங்காக் போனேனா? - சீறும் நயன்

By Shankar

'தன் கையில் பிரபு தேவா என குத்தப்பட்டுள்ள பச்சை (டாட்டூ) யை அழிக்கத்தான் பாங்காக் போனார் நயன்தாரா' என்று வந்த செய்திகளைக் கண்டு கொதிப்பில் உள்ளார் நயன்தாரா.

நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலில் விழுந்து அடிபட்டு இப்போது முறிந்து பிரிந்து கிடக்கின்றனர். இருவரும் தங்கள் பக்க நியாயங்களை பேட்டிகளில் கொட்டி வருகின்றனர்.

இருவரும் பின்னிப் பிணைந்து கிடந்த போது, பிரபு தேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி தன் நெருக்கத்தை உலகுக்குக் காட்டினார் நயன். இப்போது பிரிந்த பின்பு அந்த பச்சை ரொம்ப படுத்துவதால் அதை அழிக்க நயன் முயற்சி செய்து வருவதாகவும் அறுவை சிகிச்சை செய்து அழிப்பதற்காக பாங்காக் சென்று வந்ததாகவும் செய்தி வெளியானது.

பாங்காக்கில் இருந்து திரும்பிய அவரை மீனம் பாக்கம் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி 40 நிமிடம் சோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவைக் கேட்டபோது, காட்டமாக மறுத்தார். அவர் கூறுகையில், "என்னைப் பற்றி தேவையற்ற வதந்திகள் வருவதே வழக்கமாகிவிட்டது. எனக்கு வேண்டாதவர்கள் இதை பரப்பி இருக்கிறார்கள். இவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இந்த வதந்திகளால் நான் வருத்தப்படவும் இல்லை. இது போன்று வெறும் யூகத்தின் அடிப்படையில் வெளியாகும் செய்திகள் கோபத்தைதான் ஏற்படுத்துகின்றன. என்னை தொழில் ரீதியாக பார்க்க வேண்டும் தவிர சொந்த வாழ்க்கையை வைத்து பார்க்க கூடாது.

என் கையில் குத்தி இருந்த பச்சையை அழிக்க வேண்டுமானால் நான் ஏன் பாங்காக் போக வேண்டும். அதை இந்தியாவிலேயே எளிதாக அழித்து விட முடியும்.

உண்மையை விசாரித்து அறியாமல் என்னை பற்றி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் பச்சை குத்தி இருந்ததை அழித்து இருக்கிறேனா என்று நேரில் வந்து பார்க்கலாம். விமான நிலையத்தில் பயணிகள் சோதனையிடப்படுவது வழக்கமான நடைமுறைதான். அப்படித்தான் என் விஷயத்தில் நடந்தது. வழக்கத்தை விட சற்று தாமதப்படுத்திவிட்டார்கள். ஏன் என்று தெரியவில்லை," என்றார்.

கொஞ்சநேரம் கூடுதலாக நிற்க வைத்துப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்களோ!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X