ரகுவரனின் கடைசிப் படத்தில் நயன்தாரா செய்த நல்ல விஷயம்; மனம் திறந்த பிரபல நடிகை!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எவர் க்ரீன் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும். அப்படியான படம்தான் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம். இந்த படத்தில் தனுஷ், நயன்தாரா, ரகுவரன், சரண்யா மோகன், மனோ பாலா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருப்பார்கள். படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இந்த படம் இன்றைய தலைமுறையினர் பார்த்தால் கூட படம் போராடிக்காமல் செல்லும். அதற்கு முக்கிய காரணம் படத்தின் திரைக்கதை. 2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஆடவரி மாதலுக்கு அர்த்தாலே வெருளே என்ற படத்தின் தமிழ் ரீமேக்காகும். அறிமுக இயக்குநர் மித்ரன் ஜவஹர் படத்தை இயக்கியிருப்பார்.
இந்தப் படத்தில் தனுஷ் நயன்தாராவைக் காதலிப்பார். ஆனால் நயன் தாரா ஏற்கனவே தனுஷின் நண்பனும் தனது மாமன் மகனுமான கார்த்திக்கிற்கு நிச்சயம் செய்யப்பட்டிருப்பார். இது தெரியாமல் நண்பர்கள் இருக்க, ஒரு கட்டத்தில் தனுஷின் அப்பா ரகுவரன் இறந்த பின்னர், நயன்தாராவுக்கும் தனுஷ்க்கும் உண்மை தெரியவந்த பின்னர், என்ன நடக்கின்றது என்பதும், இருவரும் சேர்ந்தார்களா என்பது மீதிக்கதை. இதில் நயன்தாராவின் தங்கையாக சரண்யா மோகன் நடித்திருப்பார். சரண்யா மோகன் தனுஷை வெறித்தனமாக ஒருதலையாக காதலிப்பார். இப்படியான காட்சிகளால் படம் முழுவதும் அட்டகாசமாக இருக்கும். ஒரு சில இடங்களில் வசனங்கள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருக்கும். மிகவும் அற்புதமான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை பக்கபலமாக இருந்திருக்கும். அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.

ரகுவரன் மறைவு: இந்த படத்தில் கமிட்டாகி நடித்துக்கொண்டு இருந்த ரகுவரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. படத்தில் ரகுவரன் இறப்பது போன்றும் அவருக்கு தனுஷ் இறுதிச் சடங்குகளைச் செய்வது போன்றுமான காட்சி கூட படத்தில் இருக்கும். இந்த காட்சி இன்றைக்கும் பல ரசிகர்களை கண்கலங்கை வைத்துவிடும்.

நயன் செய்த உதவி: இந்நிலையில் படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாகவும் தனுஷை வெறித்தனமாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சரண்யா மோகன், தனுஷுடன் ஒரு பாடலில் குத்தாட்டம் போட்டிருப்பார். படப்பிடிப்பின் போது, ஒருமுறை சரண்யா மோகனுக்கு அதிகப்படியான காச்சலாக இருந்துள்ளது. எப்போது படப்பிடிப்புத் தளத்தில் துறுதுறுவென இருக்கும் சரண்யா மோகன் ஒரு இடத்தில் அமையாதியாக இருந்ததைப் பார்த்த நயன்தாரா அருகில் சென்று என்ன ஆச்சு என விசாரிக்க, சரண்யா மோகனுக்கு காய்ச்சல் என்ற விபரம் தெரியவந்துள்ளது. உடனே நயன்தாரா தனது கேரவனைக் கொடுத்து அங்கு சரண்யா மோகனை நன்கு ஓய்வு எடுக்கும்படியும், சரண்யாவின் காட்சிகள் வரும் வரை யாரும் அவரை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தயாரிப்பு நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.

நயனுக்கு நன்றி: இந்த சம்பவம் குறித்து தற்போது பேசிய நடிகை சரண்யா மோகன், உச்சநட்சத்திரமான நயன்தாரா தன்னுடன் நடிக்கும் சிறிய நடிகைகளுக்கும் இப்படியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லாதபோதும் கூட நயன்தாரா எனக்கு உதவி செய்தார் எனக் கூறி, அவருக்கு நன்றியும் கூறியுள்ளார்.

2 இயர்ஸ் ஆஃப் நயன் & விக்கி: நயன்தாரா தனது காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டைக் குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடன் ஹாங் காங் சுற்றுபயணத்தை முடித்துக் கொண்டு சமீபத்தில் தான் சென்னைக்கு வந்தார். நயனும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றது என்பதை கொண்டாடவே ஹாங் காங் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











