பொண்டாட்டி கழுத்தில் பஜக்குனு முத்தம் கொடுத்த விக்கி.. Vatican Cityயில் ரொமான்ஸில் மிதந்த நயன்தாரா!

சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களான உயிர், உலகத்துடன் Vatican City-யில் ஜாலியாக சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா, பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தொடர்ந்து தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட காதல், பின்னர் திருமணமாக மாறியது ரசிகர்களால் கொண்டாடப்படும் காதலாக மாறி உள்ளது. 2015-ஆம் ஆண்டு வெளியான 'நானும் ரௌடி தான்' படத்தில் இருவரும் சேர்ந்து பணியாற்றிய போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடி, 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது.

Nayanthara Vignesh Shivan kiss
Photo Credit:

நயன்,விக்கி: திருமணத்திற்குப் பிறகு வாடகைத் தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகளை வரவேற்றனர். தங்களது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் என் சிவன் மற்றும் உலக் தெய்விக் என் சிவன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த குழந்தைகளை ரசிகர்கள் "உயிர் & உலகம்" என அன்புடன் அழைத்து வருகின்றனர். சினிமா மற்றும் பிஸ்னஸ் என பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவதை இருவரும் பெரிதும் விரும்புகின்றனர். தற்போது இவர்கள் Vatican Cityக்கு டூர் சென்று இருக்கும் நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட போட்டோவை ஷேர் செய்துள்ளனர். அந்த போட்டோவில் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு கழுத்தில் நச்சுனு முத்தம் கொடுத்துள்ளார். மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளன. இந்த குடும்ப புகைப்படம் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Nayanthara Vignesh Shivan kiss
Photo Credit:

கைவசம் உள்ள படம்: நயன்தாரா கடைசியாக 'டெஸ்ட்' படத்தில நடித்திருந்தார். அதில்,மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விளையாட்டு மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், அவர் தற்போது 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960', 'ராக்காயி', மேலும் மலையாளத்தில் 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மற்றொரு பக்கம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'எல்ஐகே' (LIK - Love Insurance Kompany) திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், கௌரி கிஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த கதைக்களத்தில் உருவான இந்த படம் கணிசமான வசூலை அள்ளியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X