»   »  நயன்தாராவுக்கு சம்பளம் அல்ல கதாபாத்திரம் தான் முக்கியம்: மலையாள இயக்குனர் சாஜன்

நயன்தாராவுக்கு சம்பளம் அல்ல கதாபாத்திரம் தான் முக்கியம்: மலையாள இயக்குனர் சாஜன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தாலும் மலையாளப் படங்களில் நடிக்கையில் அவர் சம்பளத்திற்கு அல்ல மாறாக கதாபாத்திரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறார் என்று மல்லுவுட் இயக்குனர் ஏ.கே. சாஜன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சீனியர் முதல் இளம் ஹீரோக்கள் வரை பலரும் தங்களுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்குமாறு இயக்குனர்களிடம் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நயன்தாரா மம்மூட்டியுடன் சேர்ந்து புதிய நியமம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா பற்றி படத்தின் இயக்குனர் ஏ.கே. சாஜன் கூறுகையில்,

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக உள்ளார். அதை நினைத்து கேரள மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

சம்பளம்

சம்பளம்

நயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். மலையாளத்தில் நடிக்கையில் அவர் சம்பளத்திற்கு அல்ல மாறாக கதாபாத்திரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறார்.

மம்மூட்டி

மம்மூட்டி

நயன்தாராவுக்கு பல வாய்ப்புகள் வந்தபோதிலும் அதை எல்லாம் விட்டுவிட்டு அவர் மம்மூட்டி படத்தில் நடிக்க வந்துள்ளார். காரணம் மம்மூட்டி மற்றும் படத்தில் அவரது கதாபாத்திரம்.

நல்லவர்

நல்லவர்

படப்பிடிப்புக்கு வந்தால் தனது காட்சிகளில் நடித்து முடித்தவுடன் நயன்தாரா கேரவனுக்கு செல்ல மாட்டார். மாறாக செட்டில் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசிக் கொண்டிருப்பார்.

தலைக்கனம்

தலைக்கனம்

பெரிய நடிகையாக இருந்தாலும் நயன்தாரா தலைக்கனம் இல்லாதவர். அவரிடம் வேலை வாங்குவதில் இயக்குனர்களுக்கு பிரச்சனையே இருக்காது என்று சாஜன் தெரிவித்துள்ளார்.

English summary
Puthiya Niyamam director AK Sajan told that Nayanthara gives importance to her character in the movies and not the salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil