அடேங்கப்பா 50 நொடிகளுக்கு 5 கோடி ரூபாயா?.. நயன்தாரா ஒரு முடிவோடுதான் இருக்காங்க போல
சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு சினிமாக்களில் படு பிஸியாக நடித்துவரும் அவர்; தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி பிற தொழில்களிலும் தனது கவனத்தை செலுத்திவருகிறார் அவர். இந்நிலையில் அவர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே உச்சக்கட்ட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றுக்கொண்டார்கள். அது அப்போதைக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த விவகாரத்தில் நயனும், விக்கியும் எந்தவிதமான விதிமீறலையும் செய்யவில்லை என்று உறுதியானது.

பிஸியான நடிகை: பொதுவாக திருமணத்துக்கு பின்பு நடிகைகள் தாங்கள் நடிப்பதை நிறுத்திவிடுவார்கள் அல்லது குறைத்துவிடுவார்கள். ஆனால் நயன் அப்படி இல்லை. திருமணத்துக்கு பிறகும் பிஸியாக நடித்துவருகிறார் அவர். தமிழில் மட்டுமே கலக்கிவந்த அவர் இப்போது ஹிந்தியிலும் கலக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்த முதல் ஹிந்தி படமான ஜவான் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நயனின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே வெகுவாக ரசிகர்களை கவர்ந்தன.
பிற தொழில்கள்: தற்போது அவர் ராக்காயி, டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். அதேபோல் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பிற தொழில்களிலும் கவனம் செலுத்திவருகிறார் அவர். பெமி 9 என்ற நாப்கின் தயாரிக்கும் நிறுவனம், ஸ்கின் கேர் போன்ற தொழில்களில் ஈடுபடும் அவர்; கேரளாவில் மிகப்பெரிய அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்டி அதனை வாடகைக்கு விடும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
சர்ச்சைகள்: இப்படி நடிப்பு,பிற தொழில்கள் என பிஸியாக இருக்கும் நயனை சுற்றி கடந்த சில காலமாகவே சர்ச்சைகளும் அடிக்கடி வருகின்றன. முதலில் தனுஷுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து நான்கு பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனுஷை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மூன்று பேரை பற்றி ஆங்கில தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது தரக்குறைவாக பேசியிருந்ததும் கண்டனத்தை பெற வைத்தது.
5 கோடி ரூபாய்: இப்படி தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கும் நயன்தாரா குறித்து புதிய தகவல் ஒன்று வட்டமடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி டாடா ஸ்கை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா ஒத்துக்கொண்டார் என்றும்; அதற்கு 50 நொடிகளுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது 50 செகண்ட்ஸுக்கு 5 கோடி ரூபாயா என்று வாயை பிளந்து மூக்கில் விரலை வைத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











