பட வாய்ப்பே இல்ல.. மல்லுவுட்டிற்கு தாவிய நயன்தாரா.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாராவுக்கு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் கைவசம் இல்லாததால், அவர் தற்போது மலையாளத்தில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் கமிட்டாகி உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு இன்று அறிவித்துள்ளது.

நடிகர் சரத்குமார் நடித்த ஐயா படத்தில், பாவாடை சட்டையில் வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நயன்தாரா. முதல் படமே இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்ததால், இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்தார்.

Nayanthara has been confirmed to join the cast of the upcoming Malayalam film

லேடி சூப்பர் ஸ்டார் நயன்: நயன்தாரா வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை சந்தித்தாலும், அனைத்தையும் சந்தித்து மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார். அவரது விடா முயற்சி நயன்தாராவை தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக மாற்றியது. 40 வயதிலும் இளம் நடிகைகள் போல் இளமையான தோற்றத்துடன் வலம் வரும் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து முடித்து உள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளப்படத்தில் நடித்து வந்த நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனார். பாலிவுட் கிங் காங் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே ஷாருக் கானுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமாக பார்க்கப்பட்டது. பான் இந்திய திரைப்படமாக பல மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

Nayanthara has been confirmed to join the cast of the upcoming Malayalam film

ஜவான் திரைப்படத்திற்கு பின் பல பாலிவுட் படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நயன்தாராவிற்கு பெரியதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. இதனால், மல்லுவுட் பக்கம் தாவி உள்ள நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் டியர் ஸ்டூடண்ட்ஸ் திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர்.

தமிழ் புத்தாண்டு தினமான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நயன்தாராவும், நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து, 2019ம் ஆண்டு லவ் ஆக்‌ஷன் ட்ராமா என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X