twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு... சினிமா தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா, ரூ. 20 லட்சம் உதவி!

    By
    |

    சென்னை: ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா, ரூ. 20 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ். பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    உடல் எடையை பாதியாக குறைத்த பிரபல நடிகை.. அப்படியும் வாய்ப்பு வராததால் வருத்தமாம்!உடல் எடையை பாதியாக குறைத்த பிரபல நடிகை.. அப்படியும் வாய்ப்பு வராததால் வருத்தமாம்!

    Nayanthara has donated Rs.20 lakhs for fefsi

    இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    இதனால், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக, சினிமா தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சினிமாவில் தினசரி ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

    அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.

    Recommended Video

    ஆயிரம் ருபாய் 10 கிலோ அரிசி TV SERIAL கலைஞர்களுக்கு கொடுத்தார் சிவகார்த்திகேயன் |V-CONNECT|FILMIBEAT

    இதை ஏற்று நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி உட்பட பல நடிகர்கள் உதவினர். தயாரிப்பாளர்களும் உதவினர். இந்நிலையில் நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாயை, பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

    English summary
    Actress Nayanthara has given Rs.20 lakh for fefsi members
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X