'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்ட நயன்தாரா: காரணம்...
Recommended Video

சென்னை: இந்தியன் 2 படத்தில் நடிக்க நயன்தாரா நிறைய நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.
கமல் ஹாஸன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஷங்கர். பட வேலைகள் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் கமல் ஹாஸன் ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பிக் பாஸ்
கமல் ஹாஸன் பிக் பாஸ் வேலையில் பிசியாக இருப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் படமாக்கத் துவங்கவில்லையாம். அவர் இல்லாத காட்சிகளை படமாக்கி வருகிறார் ஷங்கர்.

நிபந்தனை
இந்தியன் 2 படத்தில் நடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளாராம் நயன்தாரா. தன் நிபந்தனைகளை ஒப்பந்தமாக எழுதி அதில் தயாரிப்பாளர்கள் தரப்பில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம்.

கால்ஷீட்
கால்ஷீட் கொடுத்த நாட்களில் மட்டுமே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வேன், கால்ஷீட் கொடுத்த நாட்களையும் தாண்டி ஷூட்டிங் நடந்தால் வேறு வேலை இல்லாமல் இருந்தால் மட்டுமே வருவேன் என்று நிபந்தனை விதித்துள்ளாராம் நயன்.

முத்தம்
நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன். முத்தக் காட்சிகளில் நடிப்பது என்றால் முன்கூட்டியே கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளாராம் நயன்தாரா. கமல் ஹாஸன் படத்தில் முத்தக் காட்சி இல்லாமலா இருக்கும் என்கிறார்கள் கோலிவுட்காரர்கள்.

தாமதம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 பட வேலைகள் இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் ஷங்கர் இந்தியன் 2 வேலையை துவங்கியுள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்கவே நயன்தாரா இப்படி நிபந்தனைகள் விதித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











