கழற்றிவிட முடிவெடுத்த படக்குழு?.. அதிரடியாக சம்பளத்தை குறைத்த நயன்தாரா?.. அய்யோ இவ்வளவா?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக 20 வருடங்களுக்கும் மேல் இருப்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணமாகி, குழந்தைகள் பெற்ற பிறகும் தொடர்ந்து பிஸியாக நடித்துவரும் நயன்; கடைசியாக டெஸ்ட் படத்தில் நடித்திருந்தார். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் பெரிதான வரவேற்பு எதுவும் இல்லை.
ஹரி இயக்கிய ஐயா படத்தில் தனது தமிழ் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் நயன்தாரா. அப்படம் ஹிட்டானதால் தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக குறுகிய காலத்திலேயே வந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க சில பிரச்னைகள் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கினார். சிறிது காலத்துக்கு பிறகு மீண்டும் திரையுலகுக்கு வந்த அவர் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளையும், ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்தார்.
விக்னேஷ் சிவனுடன் திருமணம்: நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்த அவர் வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார். மேலும் ஹிந்தியிலும் ஜவான் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி அங்கும் தனக்கான ரெஸ்பான்ஸை பெற ஆரம்பித்திருக்கிறார்.
நயனுக்கு பிரச்னைகள்: கடந்த சில வருடங்களாக பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காமல் நயனை சுற்றி சமீபமாக ஏகப்பட்ட பிரச்னைகள், தனுஷுடன் மோதல், பத்திரிகையாளர்களை தவறாக பேசியது, மதுரைக்கு சென்ற நிகழ்ச்சி என சர்ச்சைகளும் விமர்சனங்களும் வந்துகொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க விக்னேஷ் சிவன் மீதும் விமர்சனங்களும் கிண்டல்களும் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாமென நயன் கூறியதும் ட்ரோலுக்கு உள்ளானது.

மூக்குத்தி அம்மன் 2: இந்த சூழலில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தின் பூஜை போட்டதிலிருந்தே அவர் பற்றிய நெகட்டிவ் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. முதலில் மீனாவை அவமானப்படுத்திவிட்டார் என்ற பேச்சு எழுந்தது. இதனையடுத்து படத்தின் ஷூட்டிங்கில் அவரும் சுந்தர். சிக்கும் பிரச்னை; படத்திலிருந்து நயன்தாராவை தூக்கிவிடுவார்கள் என்றெல்லாம் தொடர்ந்து தகவல்கள் வந்துகொண்டே இருந்தன.
சம்பளத்தை உயர்த்திய நயன்: இந்நிலையில் சிரஞ்சீவி தான் நடிக்கும் 157ஆவது படத்தில் நயன்தாராவை ஹீரோயினாக்க முடிவு செய்ததாகவும்; சம்பளமாக நயன்தாரா 15 கோடி ரூபாய் கேட்டார் என்றும் திரைத்துறையில் குரல்கள் கேட்டன. அதனைத் தொடர்ந்து நயனுக்கு கடைசியாக என்ன படம் ஓடியதென்று அவர் இவ்வளவு சம்பளம் கேட்கிறார் என்றும் சமூக வலைதளவாசிகள் பேச ஆரம்பித்தார்கள். நிலவரம் இப்படி இருக்க இப்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் அவரை கழற்றிவிட படக்குழு முடிவு செய்ததாம். ஆகினும் படத்தில் தன்னுடைய கேரக்டர் பற்றி தெரிந்துகொண்ட நயன்; உடனடியாக சுதாரித்துக்கொண்டு சம்பளத்தை குறைக்க ரெடி என்றாராம். படக்குழு தரப்பிலிருந்து 6 கோடி ரூபாய் தர ஒத்துக்கொண்டதாகவும்; நயனும் அந்த சம்பளத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் என்று டோலிவுட் திரையுலகத்தில் பேச்சுக்கள் ஓட ஆரம்பித்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











