என்னது 5 கோடி ரூபாயா?.. யார் சொன்னது?.. நயன்தாரா தரப்பு வெளியிட்ட ஆதாரம்

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றிய ஆவணப்படம் Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த நயனும், விக்னேஷும் தனுஷிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை. இருப்பினும் ட்ரெய்லரில் மூன்று நொடிகள் நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பயன்படுத்தியதால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார் தனுஷ். இந்த சம்பவங்கள் அப்போதைக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது நயன்தாராவுக்கும், அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டார்கள். அதில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். இருவருக்குமான திருமணத்துக்கு வந்தவர்கள் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என்று கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. அது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

nayanthara vignesh shivan

The Fairy Tale: அதனையடுத்து தங்களது திருமணம் தொடர்பான வீடியோவை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திம் 25 கோடி ரூபாய்க்கு நயனும், விக்கியும் விற்றுவிட்டார்கள் என்று கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க தனது 40ஆவது பிறந்தநாளை கடந்த வருடம் கொண்டாடினார் நயன். அதனையொட்டி அவரின் திருமணம் தொடர்பான காட்சிகள் மற்றும் அவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகள், அனுபவங்கள் பற்றிய ஆவணப் படம் Nayanthara Beyond The Fairy Tale என்கிற பெயரில் வெளியானது.

பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை: அந்த ஆவணப் படத்தில் நயன் இதுவரை சந்தித்த பிரச்னைகள், அதனை அவர் கடந்து வந்த விதம் உள்ளிட்டவைகள் இருந்தன. மேலும் அவர் பற்றி விக்னேஷ் சிவன், நயனின் தாய், நயனை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர், நடிகை ராதிகா என பலர் புகழ்ந்து பேசினார்கள். நயனும் தன்னுடைய முந்தைய காதல் தோல்விகள், தனது கணவர் விக்னேஷ் பற்றியும் நிறைய விஷயங்களை பேசியிருந்தார். ஆனால் பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை

மூன்று நொடி வீடியோ: இதற்கிடையே இந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் பட காட்சிகளை பயன்படுத்துவதற்கு தனுஷிடம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் அனுமதி கேட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் என்கிற முறையில் அவர் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தாலும் மூன்று நொடிகள் மட்டும் வரக்கூடிய ஃபுட்டேஜை அந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் வைத்தார்கள். அது தனுஷுக்கு தெரியவந்ததை அடுத்து பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸை நயன்தாராவுக்கு அனுப்பியிருந்தார். தொடர்ந்து நயன் தனுஷை விமர்சித்து கடிதம் எழுதியிருந்தார்.

கோர்ட்டில் வழக்கு: சூழல் இப்படி இருக்க ஆவணப் படத்தில் கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் சம்பந்தப்பட்ட ஃபுட்டேஜ்கள் இருந்தன. இதனால் கொதிப்படைந்த தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். மேலும் நயனும், விக்னேஷ் சிவனும் இப்படி செய்திருக்கவே கூடாது என்று ரசிகர்களும் தங்களது தரப்பிலிருந்து கண்டனத்தை முன்வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன் வெளியிட்ட ஆதாரம்: இந்நிலையில் அந்த ஆவண படத்தில் சந்திரமுகி பட சம்பந்தப்பட்ட காட்சிகளும் இருந்தன. ஆனால் அதுதொடர்பான அனுமதியையும் படத்தை தயாரித்த சிவாஜி புரொடக்‌ஷன்ஸிடம் வாங்கவில்லை என்றும்; அதன் காரணமாக அந்த நிறுவனம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் நயன்தாரா தரப்பு ஆதாரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி முறையான அனுமதியை நவம்பர் இரண்டாம் தேதியே சிவாஜி புரொடக்‌ஷன்ஸிடம் வாங்கிவிட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X