வீடியோவை அழித்தால் காசு தரோம்..இன்ஸ்டா பிரபலத்திடம் பேரம் பேசிய நயன்தாரா?..என்ன இப்படி இறங்கிட்டாங்க

சென்னை: விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நானும் ரௌடிதான் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதலிக்க தொடங்கினார்கள். அதற்கு பிறகு லிவிங் டூ கெதரில் இருந்த அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகு ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். சமீப காலமாக அவர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவரும் சூழலில் இப்போது அவர்கள் பற்றி புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து பிரிந்த அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். நயனைவிடவும் விக்னேஷ் சிவன் வயதில் சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேரும் காதலில் விழுந்த பிறகு ஒரே வீட்டில் சில வருடங்கள் லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்ந்தார்கள். இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்ட பிறகு 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள்.

nayanthara vignesh shivan

வாடகை தாயால் குழந்தை: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டார்கள். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் தமிழ்நாடு அரசு நடத்திய விசாரணையில் அந்த விவகாரத்தில் எந்தவிதமான விதிமீறலும் நடைபெறவில்லை என்பது உறுதியானது. பிறந்த ஆண் குழந்தைகளுக்கு உயிர், உலக் என்ற பெயர்களை வைத்தார்கள் நயன் - விக்கி தம்பதி. பிறகு நயனும், விக்கியும் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள்.

தொழிலிலும் பிஸி: ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் மறுபக்கம் தொழில் செய்வதிலும் பிஸியாக இருக்கிறார் நயன். ஸ்கின் கேர், சானிடரி நாப்கின் தயாரிப்பது போன்ற பிஸ்னெஸ்களை தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நடத்திவருகிறார். சூழல் இப்படி இருக்க தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதை கடந்த சில மாதங்களாகவே வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் கணவனும், மனைவியும். முதலில் தனுஷுடன் அவர்களுக்கு மோதல் எழுந்து கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது.

மதுரையில் சம்பவம்: இதனையடுத்து ஃபெமி 9 நாப்கின் நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழா மதுரையில் நடந்தது. இதில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்களை அழைத்திருந்தார்கள். காலை ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தாலும் விக்கியும், நயனும் 6 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3 மணிக்கே வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் நயனையும், விக்னேஷையும் பார்த்து இவர்கள் நார்மல் பீப்பிள் இல்லை என்று கூறும் வீடியோவும் பயங்கரமாக ட்ரெண்டானது.

பேரம் பேசிய நயன்: சூழல் இப்படி இருக்க அந்த நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள் குறித்து Adipoli Foodie என்ற பிரபலமான இன்ஸ்டா ஐடியிலிருந்து வீடியோ ஒன்று போடப்பட்டிருந்தது. அதில் உணவுகூட வழங்கவில்லை, கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தவில்லை என பல குற்றச்சாட்டுக்களை அந்த ஐடியை வைத்திருப்பவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சில மணி நேரத்திலேயே அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த ஐடியை வைத்திருப்பவர் புதிய வீடியோ ஒன்று போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “குறிப்பிட்ட அந்த வீடியோவை போட்ட பிறகு நயன்தாராவின் தரப்பிலிருந்து எனக்கு ஃபோன் கால் வந்தது. அப்போது அவர்கள் என்னிடம் அந்த வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள். எங்கள் தயாரிப்புக்கு கெட்ட பெயர் வந்துவிடும் என்றார்கள். அதற்கு நானோ அதில் உங்கள் Productஐ பற்றி தவறாகவே பேசவில்லையே என்றேன். உடனே அவர்கள் டெலிட் செய்துவிடுங்கள் உங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு என்ன வருமானம் வருமோ அதனை தருகிறோம் என்று கூறினார்கள். நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். பிறகு ஸ்ட்ரைக் அடித்து அந்த வீடியோவை டெலிட் செய்ய வைத்துவிட்டார்கள்” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X