»   »  நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?

நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக இன்றைய தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் அதிகபட்ச 'ஆயுள்' 5 ஆண்டுகள்தான். த்ரிஷா, நயன்தாரா போன்ற நடிகைகள்தான் விலக்காக 10 ஆண்டுகளைக் கடந்தும் பரபரப்பான நாயகிகளாகவே வலம் வருகின்றனர்.

தமிழ், தெலுங்கில் இருவருக்குமே நல்ல மார்க்கெட். இவர்களில் நயன்தாராவுக்குதான் ஏக மவுசு. இப்போதும் தமிழ், தெலுங்கில் 6 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

முன்னணி நாயகர்களுடன்

முன்னணி நாயகர்களுடன்

2004-ல் அய்யா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாகிவிட்டார். கமல் ஹாஸன் தவிர மற்ற முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார் நயன்.

காதல் விவகாரங்கள்

காதல் விவகாரங்கள்

சிம்பு, பிரபு தேவா ஆகியோருடன் காதல் வயப்பட்டு, ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர் நயன்தாரா. முதலில் சிம்புவுடனான காதல் முறிந்தபோது, தமிழ் சினிமாவுக்கு தற்காலிகமாக குட்பை சொன்னார். பின்னர் குசேலனில் ரஜினி ஜோடியாக நடித்தார்.

குவியும் வாய்ப்புகள்

குவியும் வாய்ப்புகள்

அடுத்து பிரபுதேவாவுடன் தீவிர காதலாகி, திருமணம் வரை சென்று முறிந்தது. அதன் பிறகுதான் அவருக்கு இன்னும் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

முதல் சாய்ஸ் நயன்தான்

முதல் சாய்ஸ் நயன்தான்

தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் போட்டி போட்டு ஒப்பந்தம் செய்தனர். நயன்தாராவை விட வயதில் குறைந்த ஹீரோக்கள் கூட, நயன்தாராதான் நாயகியாக வேண்டும் என்றனர்.

நம்பர் ஒன் நடிகை

நம்பர் ஒன் நடிகை

இன்றைய தேதிக்கு தமிழ் படஉலகில் நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார் நயன்தாரா.

தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘மாஸ்', சிம்புவுக்கு ஜோடியாக ‘இது நம்ம ஆளு', ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்', விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்' படங்களில் நடிக்கிறார். ‘மாயா' என்ற பேய் படத்திலும் நடிக்கிறார்.

நண்பேன்டா

நண்பேன்டா

மலையாளத்தில் மம்முட்டி ஜோடியாக ‘பாஸ்கர் த ராஸ்கல்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘நண்பேன்டா' படம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

சம்பளத்தை ஏற்றினார்

சம்பளத்தை ஏற்றினார்

தொடர்ந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் வருவதால் நயன்தாராதன் சம்பளத்தையும் உயர்த்திவிட்டார். நண்பேன்டா, இது நம்ம ஆளு படங்களுக்கே அவர் ரூ இரண்டு கோடிகளுக்கு மேல் வாங்கியிருக்கிறார். இனி புதிதாக ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ 2.5 கோடி வரை அவர் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாம்.

'அது ஒண்ணும் பிரச்சினையில்லை... உங்க டேட் கிடைச்சா மட்டும் போதும்' என வரிசை கட்டி நிற்கிறார்கள் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்!

English summary
Nayanthara has hiked her salary from Rs 2 cr to 2.5 cr after Nanbenda.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil