»   »  கொடுங்க ரூ 4 கோடி... அதிர வைக்கும் நயன்தாரா!

கொடுங்க ரூ 4 கோடி... அதிர வைக்கும் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'ஹீரோக்கள் மட்டும் படத்துக்குப் படம் சம்பளத்தை ஏற்றி, 10 கோடி, 20 கோடி என்று வாங்குகிறார்கள். அவர்களுக்கு இணையாக வெற்றியில் பங்கிருந்தும் நமக்கு மட்டும் ஓரிரு கோடிகள்தானா?'

-சமீப காலமாக இந்தக் கேள்வி நயன்தாராவைக் குடைந்து கொண்டே இருந்திருக்க வேண்டும். அம்மணி தன் சம்பளத்தை தடாலடியாக ரூ 4 கோடிக்கு உயர்த்தி விட்டாராம்.

Nayanthara hikes her salary to Rs 4 cr

தமிழ் சினிமா வரலாற்றில் இந்த சம்பளம் நிர்ணயித்திருக்கிற முதல் ஹீரோயின் நயன்தாரா மட்டும்தான் என்பது கோடம்பாக்கத்தின் இன்றைய பரபர பேச்சு.

கடந்த ஆண்டு தொடர்ந்து 4 ஹிட் படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. அவற்றில் இரண்டு படங்கள் இவருக்காகவே ஓடியவை. குறிப்பாக மாயா.

Nayanthara hikes her salary to Rs 4 cr

இப்போது திருநாள், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன், மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Nayanthara hikes her salary to Rs 4 cr

இந்தப் படங்களில் நயன்தாரா சம்பளம் ரூ 3 கோடி வரை. இந்தப் படங்களுக்குப் பிறகு ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ 4 கோடி என சம்பளத்தை உயர்த்தியிருக்கிறராம் நயன். தெலுங்கு இயக்குநர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் ரூ 4 கோடிதான்.

Nayanthara hikes her salary to Rs 4 cr

உடனே நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். தாராளமாய் பண்ணிக்கோங்க... என்னை விடுங்க என்று கும்பிடு போட்டுவிட்டாராம் நயன்தாரா!

'ஹீரோக்கள் மட்டும் படத்துக்குப் படம் சம்பளத்தை ஏற்றி, 10 கோடி, 20 கோடி என்று வாங்குகிறார்கள். அவர்களுக்கு இணையாக வெற்றியில் பங்கிருந்தும் நமக்கு மட்டும் ஓரிரு கோடிகள்தானா?' -சமீப காலமாக இந்தக் கேள்வி நயன்தாராவைக் குடைந்து கொண்டே இருந்திருக்க வேண்டும். அம்மணி தன் சம்பளத்தை தடாலடியாக ரூ 4 கோடிக்கு உயர்த்தி விட்டாராம். தமிழ் சினிமா வரலாற்றில் இந்த சம்பளம் நிர்ணயித்திருக்கிற முதல் ஹீரோயின் நயன்தாரா மட்டும்தான் என்பது கோடம்பாக்கத்தின் இன்றைய பரபர பேச்சு. கடந்த ஆண்டு தொடர்ந்து 4 ஹிட் படங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. அவற்றில் இரண்டு படங்கள் இவருக்காகவே ஓடியவை. குறிப்பாக மாயா. இப்போது திருநாள், இது நம்ம ஆளு, காஷ்மோரா, இருமுகன், மற்றும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களில் நயன்தாரா சம்பளம் ரூ 3 கோடி வரை. இந்தப் படங்களுக்குப் பிறகு ஒப்பந்தமாகும் படங்களுக்கு ரூ 4 கோடி என சம்பளத்தை உயர்த்தியிருக்கிறராம் நயன். தெலுங்கு இயக்குநர் ஒருவர் சமீபத்தில் திகில் படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை அணுகினார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கேட்ட சம்பளம் ரூ 4 கோடிதான். உடனே நயன்தாராவுக்கு பதில் அஞ்சலியை ஒப்பந்தம் செய்து விட்டார்களாம். தாராளமாய் பண்ணிக்கோங்க... என்னை விடுங்க என்று கும்பிடு போட்டுவிட்டாராம் நயன்தாரா! தமிழிலும் இந்த சம்பள உயர்வை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் நயன்தாரா!

தமிழிலும் இந்த சம்பள உயர்வை விரைவில் அறிவிக்கப் போகிறாராம் நயன்தாரா!

English summary
According to sources top actress Nayanthara has raised her salary to Rs 4 cr after 4 consecutive hits in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil