கேன்ஸ் விழாவை புறக்கணித்த நயன்தாரா... காரணம் இது தானாம்!
சென்னை : கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
75வது கேன்ஸ் திரைப்பட விழா, பிரான்ஸில் 17ந் தேதி முதல் கோலாகலமாக நடந்து வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையிலான இந்திய நட்சத்திரங்கள் குழுவினர் இடம் பெற்றுள்ளனர்.
அதன்படி அக்ஷய் குமார், நவாசுதீன் சித்திக், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், தமன்னா பாட்டியா, பூஜா ஹெக்டே, அதிதி ராவ் ஹைதாரி, கமல்ஹாசன், மாதவன், ஏஆர் ரஹ்மான், பார்த்திபன், பா ரஞ்சித் உட்பட பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இதுதான் காரணம்
இந்த விழாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலந்து கொள்வார் என்ற தகவல் வெளியானது. ஆனால், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதில், நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வரும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் திருமண ஏற்பாடு வேலைகள் விறுவிறுப்பாக நடந்த வருவதால் நயன்தாரா கேன்ஸ் விழாவை புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு மேலாக இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் அவலுடன் காத்திருந்த நேரத்தில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல படங்கள் கைவசம்
நயன்தாரா தற்போது கனெக்ட், லயன், காட் ஃபாதர், திரில்லர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், எட்டு வயது சிறுவனுக்கு அம்மாவாக 'O2' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபுவிடம் இயக்குனராக இருந்த ஜி கே விக்னேஷ் இயக்கி உள்ளார். இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது .இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக எஸ்ஆர் பிரபு தயாரித்திருக்கிறார்.

காத்துவாக்குல இரண்டு காதல்
நயன்தாரா,சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியானத் திரைப்படம் காத்துவாக்குல இரண்டு காதல் இத்திரைப்படத்தில் நயன்தாரா கண்மணி என்ற கதாபாத்திரத்திலும்,சமந்தா கதிஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. இத்திரைப்படத்தில் ரம்போ ரோலில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











