»   »  இமைக்காத நொடிகள்... ஹீரோயின் எவர்கிரீன் நயன்தாரா!

இமைக்காத நொடிகள்... ஹீரோயின் எவர்கிரீன் நயன்தாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிமான்டி காலனி இயக்கிய அஜய் ஞானமுத்துவின் அடுத்த படமான இமைக்காத நொடிகள் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படமும் கதாநாயகியை மையப்படுத்தி உருவாவதால், இந்தப் படத்துக்கு முன்னுரிமை தந்து, தேதிகளை ஒதுக்கித் தந்துள்ளாராம் நயன்.

Nayanthara in Imaikkatha Nodigal

இந்தப் படத்தில் நாயகனாக அதர்வா நடிக்கிறார். படத்தில் இன்னொரு நாயகியும் உண்டாம்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத, ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Nayanthara in Imaikkatha Nodigal

முன்னணி இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள். அக்டோபரிலிருந்து படம் தொடங்குகிறது. சிஜே ஜெயக்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Nayanthara in Imaikkatha Nodigal

படம் குறித்து அஜய் ஞானமுத்து கூறுகையில், "இந்தக் கதையை முதல் முறை கேட்டபோதே நயன்தாராவுக்கு ரொம்பப் பிடித்து கால்ஷீட் தர சம்மதித்துவிட்டார். இதுவரை அவர் பண்ணாத வேடம் இது. ரொமான்டிக் ஆக்ஷன் படம் இது," என்றார்.

English summary
Nayanthara plays the main lead in Cameo Films CJ Jayakumar's third production titled Imaikkaa Nodigal which will be directed by R.Ajay Gnanamuthu (of Demonte Colony fame).
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil