எப்பவுமே நம்பர் ஒன் நான் தான்.. தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நயன்தாரா.. இத்தனை கோடியா?
சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் என்கிற பட்டத்துடன் தென்னிந்திய திரையுலகையே கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பல பாலிவுட் படங்களிலும் கமிட் ஆகும் முயற்சியில் களமிறங்கி உள்ள நயன்தாரா தனது புதிய தமிழ் படத்துக்கு கேட்டிருக்கும் சம்பளம் கோலிவுட்டையே அதிர வைத்து இருக்கிறதாம்.

ஹீரோயின்களுக்கு குறைவு
சினிமா உலகை பொறுத்தவரையில் முன்னணி ஹீரோக்களுக்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் உயர்த்தப்பட்டாலும் நடிகைகளுக்கு இந்தியளவிலேயே குறைவான சம்பளம் தான் கொடுக்கப்பட்டு வருகின்றன. தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உள்ளிட்ட பாலிவுட் ஹீரோயின்கள் கூட பெரிய சம்பளம் வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோயின் சென்ட்ரிக்
ஹீரோக்களுக்கு நிகராக தங்களாலும் ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி நிறுத்த முடியும் என ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க நடிகைகள் முடிவு செய்ய முக்கிய காரணமே தங்களது மார்க்கெட்டை உயர்த்தத்தான் என்கின்றனர். நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை டார்கெட் செய்து நடித்து வருகின்றனர்.

பாலிவுட்டை நோக்கி
தென்னிந்தியாவில் மார்க்கெட்டை பிடித்து விட்ட நடிகை சமந்தா அடுத்ததாக பாலிவுட்டிலும் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் மூலம் மார்க்கெட்டை பிடிக்க முன்னேறியுள்ளார். தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் ஹிட் அடித்த நிலையில், சமந்தாவுக்கு பாலிவுட் பட வாய்ப்புகளும் சர்வதேச பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இதுவரை தென்னிந்திய சினிமாவை தன் வசம் வைத்திருக்கும் நயன்தாராவும் பாலிவுட்டை நோக்கி புறப்பட்டு இருக்கிறார்.

ஷாருக்கானுக்கே ஜோடி
இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக பார்க்கப்படும் பாலிவுட்டின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து இயக்குநர் அட்லி இயக்கி வரும் (லயன்) படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாகுபலி வெப் தொடரிலும் நயன்தாரா நடிக்கப் போவதாகவும் கூறப்பட்டன. இதன் காரணமாக தனது சம்பளத்தை நயன்தாரா பல மடங்கு உயர்த்தி இருக்கிறாராம். உண்மையாகவே அவரது உழைப்புக்கு இது வெறும் குறைவான சம்பளம் தான் எனக் கூறுகின்றனர்.

நம்பர் ஒன் நயன்தாரா
தென்னிந்திய திரையுலகில் இன்னமும் நடிகைகள் 5 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகின்றனர். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மட்டுமே 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். லெஜண்ட் சரவணாவின் படத்தில் நடிக்க 10 கோடி வரை நயன்தாராவுக்கு சம்பளம் பேசப்பட்டதாகவும் கால்ஷீட் காரணமாக அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அட்லியின் நண்பர் இயக்குநர் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்திற்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் கேட்டிருக்கிறாராம் நயன்தாரா.

செகண்ட் சமந்தா
நம்பர் ஒன் இடத்தில் நயன்தாரா இருக்கும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் நடிகை சமந்தா இரண்டாவது இடத்தில் உள்ளாராம். பாடல் ஒன்றுக்கே ஒன்றரை கோடி சம்பளம் வாங்கும் சமந்தா முழு படத்திற்கு 5 முதல் 6 கோடி வரை வாங்குகிறாராம். பாலிவுட் படங்களில் மேலும், சம்பளத்தை ஏற்ற முடிவு செய்திருக்கிறாராம்.
Recommended Video

யங் ஹீரோயின்
ஹீரோவுக்கே பல கோடிகள் கொடுக்க முடியாமல் லாபத்தில் ஷேர் கொடுத்து சமாளித்து வரும் தயாரிப்பாளர்கள் இப்படி முன்னணி ஹீரோயின்கள் எல்லாம் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டால் என்ன செய்வது என்று புரியாமல் தான் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா என இளம் ஹீரோயின்களை புக் செய்து வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











