டைட் ஷார்ட்ஸில் நயன்தாரா.. விக்னேஷ் சிவனுடன் போட்டிருக்கும் ஃபோட்டோவை பாருங்க

சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் விக்னேஷ் சிவனுடன் அவர் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவரை கிளாமருக்காக மட்டுமே திரையுலகம் பயன்படுத்திக்கொண்டிருந்தது. இருந்தாலும் முட்டி மோதி தன்னுடைய திறமையை காண்பிக்கும் படங்களில் நடிக்க முயன்றுகொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்த அவர் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார். பிரபுதேவாவை காதலித்தபோது சினிமாவிலிருந்து ஒதுங்கினார். பிறகு மீண்டும் சினிமாவுக்குள் வந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்தார்.

Nayanthara Vignesh Shivan

நானும் ரௌடிதான்: அந்தவகையில் அவருக்கு கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழிக்கு சொந்தமானார் நயன். அதேபோல் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

Nayanthara Vignesh Shivan

குடும்ப வாழ்க்கை, நடிப்பு: திருமணம் செய்துகொண்ட நயன் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். உயிர், உலக் என அவர்களுக்கு பெயர் வைத்திருக்கிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்டாலே நடிப்புக்கு மூட்டை கட்டும் பெரும்பாலான நடிகைகளுக்கு மத்தியில் நயன்தாரா தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார் அவர்.

தமிழில்: ஹிந்தி மட்டுமின்றி தமிழிலும் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருக்கிறார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த அப்படம் நயனுக்கு 75ஆவது படமாகும். தமன் இசையமைக்க கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. அன்னபூரணிக்கு அடுத்ததாக அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Nayanthara Vignesh Shivan

நிம்மதியான நயன்: அவர் பிஸியாக படங்களில் நடித்துவந்தாலும் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருக்கிறார். அதிலும் தனது மகன்கள் மீது ரொம்பவே பிரியமாக இருக்கும் அவர் அவ்வப்போது அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவருகிறார். இதற்கிடையே மலையாளத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

Nayanthara Vignesh Shivan

ட்ரெண்டாகும் புகைப்படம்: இந்நிலையில் அவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹாங்காங் சென்றிருக்கிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் நயன். அதில் டைட்டான ஷார்ட்ஸில் இருக்கும் அவரை பார்த்து, திருமணமானாலும் நயனின் கிளாமர் குறையவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்து அந்தப் புகைப்படங்களை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X