நயன்தாரா நார்மல் மனுஷி இல்லையா?.. Femi9 விழாவில் நடந்த அக்கப்போர்.. வரிசையாக வெளியாகும் வீடியோக்கள்!

சென்னை: சினிமா பிரபலங்கள் பொதுவாக விழாக்களுக்கு சென்றாலே அந்த இடம் திருவிழாவாக மாறிவிடும். நடிகை நயன்தாரா நடிப்பை தாண்டி பல தொழில்களை தொடங்கி பிசினஸ் உமனாகவே மாறி அசத்தி வருகிறார். அவரது சானிட்டரி நாப்கின் நிறுவனமான Femi9 தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சி காலை 9 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணிக்கு முடியும் என்று சொல்லப்பட்ட நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நிகழ்ச்சிக்கு வந்ததே மதியம் 3 மணிக்குத்தான் என்றும் நிகழ்ச்சி முடிய 6 மணிக்கு மேல் ஆகிவிட்டதாக இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் ஏற்கனவே புகார் தெரிவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியது.

nayanthara vignesh shivan heroine

இந்நிலையில், நடிகை நயன்தாரா நார்மல் பீப்பள் இல்லை என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் பேசும் வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து லேடி சூப்பர் ஸ்டாரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

பொங்கல் கொண்டாட்டம்: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது 2 மகன்களான உயிர் மற்றும் உலக் உடன் தனது வீட்டில் அழகாக பொங்கல் வைத்து சூர்ய வழிபாடு நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். தனது புதிய படத்துக்காக நடிகை நயன்தாரா உடல் எடையை குறைத்திருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நயன்தாராவின் 8 படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

நார்மல் பீப்பள் கிடையாது: நடிகை நயன்தாரா சினிமாவை தாண்டி அழகு சாதன பொருட்கள் விற்பனை, சானிட்டரி நாப்கின், டீ கடை, கேப், டிக்கெட் 9 நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப் என ஏகப்பட்ட தொழில்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். குறைந்த விலையில் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை வழங்க அவர் தொடங்கிய ஃபெமி 9 நிறுவனத்தின் விழாவை சமீபத்தில் கொண்டாடினார் நயன்தாரா. அங்கே அவர் வர தாமதம் ஆனதும், அங்கே ஏற்பட்ட சில குளறுபடிகளை சரி செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முற்படும் போது கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கிருந்த ஒருவர், நயன்தாரா மேடம் நமக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இங்க வந்திருக்காங்க.. சொல்றதை கேளுங்க, கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.. அவங்க நம்மள போல நார்மல் பீப்பள் கிடையாது என பேசி கூட்டத்தை கட்டுப்படுத்தினார். தற்போது அந்த வீடியோவை நெட்டிசன்கள் ஷேர் செய்து நயன்தாரா நார்மல் மனுஷி கிடையாதா? என ட்ரோல் செய்து வருகின்றனர்.

தேவையற்ற நெகட்டிவிட்டி: நடிகை நயன்தாராவின் நிகழ்ச்சியில் மட்டுமின்றி எந்தவொரு நிகழ்ச்சியிலும் கூட இருப்பவர்கள் இப்படி பில்டப் கொடுப்பதை பார்க்க முடியும். அதற்கு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம். இதை ஷேர் செய்வதால் தேவையற்ற நெகட்டிவிட்டி தான் பரவும் என்றும் அஜித் சொன்னது போல டாக்ஸிக் மனநிலையில் இருந்து ரசிகர்கள் மாற வேண்டும் என லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X