twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டோலிவுட்டில் நயன், அனுஷ்கா, சமந்தா, காஜல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை- வீடியோ

    ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை நம்ம நயன்தாரா தான்.

    கோலிவுட்டில் மட்டும் அல்ல டோலிவுட்டிலும் முன்னணி நடிகையாக உள்ளார் நயன்தாரா. அதனால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    கார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்கார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்

    நயன்தாரா

    நயன்தாரா

    நயன்தாரா தெலுங்கு படத்தில் நடிக்க ரூ. 3 முதல் 4 கோடி சம்பளம் வாங்குகிறார். டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையும் அவர் தான். கோலிவுட்டில் ஒரு படத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் கேட்கிறார் நயன்.

    அனுஷ்கா

    அனுஷ்கா

    டோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள அனுஷ்கா படம் ஒன்றுக்கு ரூ. 2 முதல் 3 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான பாகமதி வெற்றி பெற்றது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார் அவர்.

    காஜல்

    காஜல்

    டோலிவுட்டின் சமத்து நடிகையான காஜல் அகர்வால் படம் ஒன்றுக்கு ரூ. 2 கோடி வாங்குகிறார். அவர் சீனியர்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை ஜோடியாக நடித்து வருகிறார்.

    தமன்னா

    தமன்னா

    சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் படம் ஒன்றுக்கு ரூ. 1.2 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். சமந்தா தனது கணவருடன் சேர்ந்து நடித்த மஜிலி அண்மையில் வெளியாகி ஹிட்டானது.

    பூஜா ஹெக்டே

    பூஜா ஹெக்டே

    குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள பூஜா ஹெக்டே படம் ஒன்றுக்கு ரூ. 1.5 கோடி வாங்குகிறார். அவர் பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    மகாநதி படம் மூலம் தெலுங்கு ரசிகர்களை இம்பிரஸ் செய்த கீர்த்தி சுரேஷ் படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி வாங்குகிறார். கீர்த்தி போனி கபூர் தயாரிக்கும் படம் மூலம் பாலிவுட் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரகுல் ப்ரீத்

    ரகுல் ப்ரீத்

    விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமான ரஷ்மிகா மந்தனா ரூ. 75 லட்சம் முதல் ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் படம் ஒன்றுக்கு ரூ. 60 லட்சம் முதல் ரூ. 1 கோடி வாங்குகிறார்.

    English summary
    Nayanthara is the highest paid actress in Tollywood. She is charging Rs. 3 crore- Rs. 4 crore for a movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X