Exclusive: திட்டமிட்டபடி 'ஐரா' ரிலீசாகுமா..? நயன்தாரா தரப்பு புது விளக்கம்!
ஐரா படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னை: ஐரா படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என நயன்தாரா தரப்பு விளக்கமளித்துள்ளது.
அஜித்துடன் 'விஸ்வாசம்', விஜய்யுடன் 'தளபதி 63', ராஜேஷ் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் 'சைரா நரசிம்மரெட்டி' மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் 'லவ் ஆக்சன் டிராமா' உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார் நயன்தாரா.
அதுமட்டுமல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 'ஐரா', 'கொலையுதிர்க்காலம்', போன்ற படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். கொலையுதிர் காலம் அடுத்த மாதம் பொங்கல் கழித்து ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீரிவமாக நடைபெற்று வருகின்றன.

பிப்ரவரியில் ஐரா
அதேபோல ஐரா படத்தை பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் செய்ய நயன்தாரா திட்டமிட்டிருந்தார். அறம் படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை லட்சுமி, மா, ஆகிய குறும்படங்களையும், "எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" திரைப்படத்தையும் இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார்.

படப்பிடிப்பு தாமதம்
நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என தெரிகிறது. இயக்குனர் சர்ஜுன் மிக தாமதமாகவே இப்படத்தை எடுத்து வருவதாக செய்திகள் வெளியானது.

தாமதமாகும் க்ளைமாக்ஸ்
படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், க்ளைமாக்ஸ் காட்சி மட்டும் எடுக்கப்படாமல் இருப்பதாகக் கூறப்பட்டது. க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்க இயக்குனர் தாமதம் செய்து வருவதால், நயன்தாரா அப்செட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அடுத்தடுத்த படங்களில் கவனம்
ஆனால், இத்தகவலை நயன்தாரா தரப்பு மறுத்துள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய நயன்தாரா தரப்பினர், "ஐரா படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட இருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. விரைவில் மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு, திட்டமிட்டப்படி ஐரா ரிலீஸ் செய்யப்படும்" எனத் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











