சூர்யா, ஜீவா, விஜய், கார்த்தி: கலக்கும் நயன்தாரா

By Siva

சென்னை: ஹரி தான் கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

கேரளத்து சேச்சியான டயானா மரியம் குரியனை அதாங்க நயன்தாராவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தவர் ஹரி. சரத்குமார் ஜோடியாக ஐயா படத்தில் நடிக்க வைக்க தான் ஹரி நயன்தாராவை தமிழகத்திற்கு அழைத்து வந்தார்.

முதல் படத்தில் சுப்ரீம் ஸ்டார், அடுத்த படமான சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் என நயன்தாராவின் கெரியர் துவக்கத்திலேயே பிக்கப்பாகிவிட்டது.

ஒத்த வரி

ஒத்த வரி

நயன்தாரா காதல் வலைகளில் விழுந்தது, நடிப்புக்கு முழுக்கு போட்டது, மீண்டும் நடிக்க வந்தது பற்றி உங்களுக்கே தெரியும். அதனால் தான் அது பற்றி ஒரு வாக்கியத்துடன் முடித்துக் கொள்கிறோம். இரண்டாம் இன்னிங்ஸில் நயனின் கெரியர் படுசூப்பர் என்றே கூற வேண்டும்.

இளம்ஹீரோக்கள்

இளம்ஹீரோக்கள்

இந்த கோலிவுட் இளம்ஹீரோக்கள் எல்லாம் நயனுடன் ஜோடி போட அடிபோடுவதால் அவரின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

ஜீவா

ஜீவா

ஈ படத்தை அடுத்து நயன்தாரா மீண்டும் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்.

விஜய்

விஜய்

அட்லீ விஜய்யை இயக்கும் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது.

கார்த்தி

கார்த்தி

ஹரி கார்த்தியை வைத்து எடுக்கும் படத்தில் அவருக்கு யாரை ஜோடியாக்கலாம் என்று ரூம் போட்டு யோசித்ததில், படக்குழுவினரிடம் கேட்டதில் நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.

நயன்தாரா

நயன்தாரா

ஹரியின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க நயன்தாராவும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

மாஸ்

மாஸ்

நயன்தாரா தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் சேர்ந்து மாஸ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X