அங்க எரியுற பல்புல என்ன எழுதியிருக்குன்னு பார்த்தீங்களா.. வாயை கோணலாக வைத்து போஸ் கொடுத்த நயன்தாரா!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதலி நயன்தாராவின் செம எக்ஸ்பிரஷன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

டான் படத்திற்காக விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுதிய 'பே' பாடல் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வரும் நிலையில், அதே வார்த்தையை குறிப்பிட்டு நயன்தாராவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோவை ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

சமீபத்தில் நடிகர் சிம்புவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து சொன்னது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

தள்ளிப்போன ரிலீஸ்

தள்ளிப்போன ரிலீஸ்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே ஒடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தியேட்டர் வெளியீட்டிற்காக தள்ளிப் போனது. பிப்ரவரி மாதம் காதலர் தினத்துக்கு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் மோதப் போகும் ஏப்ரலில் வெளியாகப் போகிறது என விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.

லாங் ஹாலிடே

லாங் ஹாலிடே

புத்தாண்டை முன்னிட்டு துபாய்க்கு பறந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அங்கிருந்து மேலும், சில வெளிநாடுகளுக்கு நீண்ட சுற்றுலா செய்து வந்ததை லாங் ஹாலிடே என இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள கேப்ஷன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், வெளிநாட்டில் எடுத்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார்.

கோண வாய் போஸ்

கோண வாய் போஸ்

காதலர் விக்னேஷ் சிவன் போட்டோ எடுக்க என்ன கமெண்ட் அடித்தார் என தெரியவில்லை இப்படியொரு முகபாவனை உடன் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது வாயை கோணலாக வைத்தபடி கொடுத்த போஸை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து அதற்கு பழிவாங்கி உள்ளார் விக்னேஷ் சிவன் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பின்னாடி என்ன எழுதியிருக்கு

பின்னாடி என்ன எழுதியிருக்கு

சாண்டா மோனிகாவில் உள்ள ஒரு கேம் சென்ட்ரில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா ஏதோ லக்கி கேம் ஆடியிருப்பது தெரிகிறது. அந்த பேக்ரவுண்டில் நயன்தாராவுக்காக எரியும் அந்த பல்புக்கு பக்கத்தில் Un Controllable என எழுதி உள்ளது. அதற்குத்தான் இப்படியொரு போஸ் கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா க்ளிக்

நயன்தாரா க்ளிக்

விக்னேஷ் சிவன் தன்னை புகைப்படம் எடுத்த நிலையில், அவர் செல்ஃபி எடுக்கும் போது எந்த அளவுக்கு ஸ்டைலாக பந்தா பண்ணுகிறார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட நயன்தாரா எடுத்த புகைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

Recommended Video

Cook With Comali Rahul தாத்தா யார்?? | Rahul Thatha Biography, Udhaya Banu
திருமணம் எப்போ

திருமணம் எப்போ

நெற்றிக்கண் படத்தின் புரமோஷனுக்காக விஜய் டிவியில் டிடி நீலகண்டனுடன் சிறப்பு பேட்டியில் பங்கேற்ற நயன்தாரா தனக்கும் விக்கிக்கும் நிச்சயம் ஆகிவிட்டது என்பதை போட்டு உடைத்தார். அதிலிருந்து இருவருக்கும் எப்போது திருமணம் என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர். போயஸ் கார்டனில் புதிதாக கட்டி வரும் வீட்டின் பணிகள் நிறைவடைந்ததும் திருமணம் என்றும் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வமாக இவர்கள் எப்போது சொல்லப் போறாங்க என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X