அடடே.. நயனுக்கு மச்சம் மாறிப் போச்சேய்யா.. கோலிவுட்டை கலக்கும் புதுப் புயல்!

By Staff

Recommended Video

நயன்தாரா அத்திவரதரை தரிசித்தார்

சென்னை: தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய்யே 'சூப்பர் ஸ்டார்' எனும் பட்டத்தின் வாரிசாக முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில காலமாக கோலிவுட்டினரால் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று பிரமாதமாக அழைக்கப்பட்டார் நயன் தாரா. காரணம்? அவரது படங்கள் பிய்ச்சுக்கிட்டு போனதுதான்.

விஜய், அஜித் என்று மாஸ் ஹீரோக்களுடன் மட்டுமல்ல, ஜெய் போன்ற மூன்றாம் கட்ட ஹீரோக்களுடன் நயன் நடித்த படங்களும் வர்த்தக மற்றும் ஜனரஞ்சக ரீதியில் தாறுமாறாக வென்றன. அதுமட்டுமல்ல இமைக்கா நொடிகள், மாயா, கோலமாவு கோகிலா ஆகிய நயனை மையமாக கொண்ட ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களும் வசூலிலும் வரவேற்பிலும் பிஸ்த்து கிளப்பின.

ஒரு படமானது தயாரிப்பாளர்களை, விநியோகஸ்தர்களை, தியேட்டர் அதிபர்களை, ரசிகர்களை திருப்திப்படுத்தினால் அது ஹிட் மூவிதான். இப்படியான படங்களை தொடர்ந்து கொடுத்ததினாலும், இப்படியான படங்களில் தொடர்ந்து இருந்ததினாலும்தான் நயனை 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரஜினிக்கு நிகராக கொண்டாடியது கோலிவுட்.

மார்க்கெட் விர்

மார்க்கெட் விர்

இதனால் நயன் தாராவின் மார்க்கெட்டும், சம்பளமும் ஏறிக்கொண்டே போனது. அவர் வயது ஏற ஏற செல்வாக்கும், பேமண்டும் உயர்ந்தது. கோலிவுட்டில் நன்கு பரிச்சயமான சிறு ஹிரோக்களும், மலையாளத்தில் மெகா ஹிட்டான ஹீரோக்களுமே வாங்காத சம்பளத்தை நயன் வாங்கினார். இதனால் அவரைப் பார்த்தாலே சினிமா துறையினருக்கு ஒரு பிரமிப்பு ஏற்பட்டது.

இறங்கிருச்சே

இறங்கிருச்சே

ஆனால் கடந்த சில நாட்களாக நயனின் நிலை அப்படியில்லை. டோரா, ஐரா, கொலையுதிர் காலம் என அவரை மையமாக வைத்து வந்த படங்களும், வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் என அவர் ஹீரோயினாக இருந்த படங்களும் தோல்வியை தழுவியுள்ளன. இருந்தாலும் இடையில் அஜித்தின் விஸ்வாசம் மட்டும் அவரை காப்பாற்றியுள்ளது. ஆனாலும் அந்த கெத்தை மிஸ்டர் லோக்கல், ஐரா, கொலையுதிர் காலம் ஆகியன முடித்துக் கட்டிவிட்டன.

சம்பளம் குறைந்ததாம்

சம்பளம் குறைந்ததாம்

இந்த தொடர் தோல்வியால் நயனின் மார்க்கெட் சரிந்துள்ளது. அவரை தேடி வரும் கதைகளும், தயாரிப்புகளும் சுணங்க துவங்கியுள்ளன. மேலும், நயனின் சம்பளமும் தானே குறைந்துள்ளதாக தகவல்கள். விஸ்வாசம் தந்த உச்சத்தால் விஜய்யின் பிகில், ரஜினியின் தர்பார் என செம்ம ப்ராஜெக்ட்டுகள் இரண்டில் நயன் இருப்பதால் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளார்.

ரஜினி, விஜய்யை நம்பி

ரஜினி, விஜய்யை நம்பி

இந்த இரண்டுமே நிச்சயமாக ஹிட்டடிக்கும். அந்த வகையில், முன்னணி இடத்தை தக்க வைப்பதில் நயனுக்கு இன்னும் கொஞ்ச நாளைக்கு பிரச்னை இருக்காது. ஆனால் அவரை மையமாக வைத்து படங்கள் எடுக்க துணிவார்கள் என்பது டவுட்டே. எந்த கோலிவுட் நயனை ‘லேடி சூப்பர் ஸ்டார்' என கொண்டாடியதோ அதே கோலிவுட்டே இப்போது ‘நயனுக்கு மச்சம் மாறிப்போச்சு' என கலாய்க்கிறது.

இதுதானுங்க உலகம்! (இந்நிலையில் இது நாள் வரையில் நயன் தனியாக நடித்துக் கொண்டிருந்த 'த்ரில்லர்' கதைகளில் இப்போது தேசிய விருது பெற்றிருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிக்க துவங்கியிருக்கிறார் என்பது கொசுறு சேதி)

- ஜி.தாமிரா

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X