நயன்தாராவிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடித்த ரசிகர்கள்!

By Mayura Akilan

கொச்சி: கொச்சியில் நகை கடை திறப்பு விழாவிற்கு வந்த நயன்தாராவை ரசிகர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகைக்கடையினை திறக்க நயன்தாராவை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

நகைக்கடையை திறக்க நயன்தாரா வருகிறார் என்று ஏற்கனவே விளம்பரப்படுத்தி இருந்ததால் அவரை காண ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்டு நின்றனர்.

காரில் ஊர்வலம்

காரில் ஊர்வலம்

வீட்டில் இருந்து நாலைந்து கார்கள் பின் தொடர அவ்விழாவுக்கு நயன்தாரா சென்றார். நயன்தாரா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் முண்டியடித்தார்கள்.

ஆட்டோகிராப் ப்ளீஸ்

ஆட்டோகிராப் ப்ளீஸ்

ஆட்டோ கிராப் வாங்கவும் நீட்டினார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரசிகர்கள் கூட்டத்தினரிரையே சிக்கிக் கொண்டார் நயன்தாரா.

மீட்ட பாதுகாப்பு குழுவினர்

மீட்ட பாதுகாப்பு குழுவினர்

இதனால் விழாக்குழுவினர் பதட்டமானார்கள். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த பாதுகாவலர்கள் விரைந்து போய் கூட்டத்தினரை விலக்கி நயன்தாராவை பத்திரமாக மீட்டனர். அவரை சுற்றி வளையம் அமைத்தபடி நகைக்கடைக்குள் அழைத்து சென்றனர்.

செக்யூரிட்டிகள் புடை சூழ

செக்யூரிட்டிகள் புடை சூழ

நகைக்கடையை திறந்து வைத்து சிறிது நேரம் நயன்தாரா சுற்றி பார்த்தார். பிறகு பாதுகாவலர்கள் துணையோடு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

முதல்முறையாக

முதல்முறையாக

நயன்தாரா ஜவுளிக்கடை, நகைக்கடை திறப்பு விழாக்களில் அதிகம் பங்கேற்பது இல்லை. முதல் முறையாக கொச்சி நகை கடையை மட்டும் திறந்து வைக்க வந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X