Nayanthara: கும்பலாக செல்ஃபி வீடியோ எடுத்த நயன்தாரா... விக்னேஷ் சிவன் மட்டும் மிஸ்ஸிங் ஏன்..?
சென்னை: கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அன்னபூரணி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான போது சர்ச்சைகளில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள நயன்தாராவின் செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் நயன்தாராவின் செல்ஃபி வீடியோ
ஐயா திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, இப்போது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன், தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனி ஒருவன் 2 உள்ளிட்ட மேலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்த அன்னபூரணி படம் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸான போது சர்ச்சையில் சிக்கியது. அன்னபூரணி படத்தின் சில காட்சிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை புண்படுத்திவிட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அன்னபூரணி படத்தின் ஸ்ட்ரீமிங் நெட்பிளிக்ஸில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர் சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்ட பின் ஸ்ட்ரீமிங் ஆனது.
நயன்தாராவும இந்த சர்ச்சை பற்றி அறிக்கை வெளியிட்டு இருந்தார். ஆனாலும் இந்த பிரச்சினைகளை கடந்து தனது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் டெஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை முடித்த நயன், தற்போது ரெஸ்ட் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
அதில், நயன்தாராவை சுற்றி ஒரு படையே ரெடியாக இருக்க, அனைவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த செல்ஃபி புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டாலும் தற்போது அதன் வீடியோ வெர்ஷனை வெளியிட்டுள்ளார் நயன். இதில் நயன் க்யூட்டாக வெட்கப்பட்டுக் கொண்டே போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு சன்டே ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதனையடுத்து இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நயன் நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் எதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை. இந்தியில் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் மட்டுமே நயன்தாராவுக்கு ஓரளவு கை கொடுத்தது. அதன்பின்னர் தமிழில் வெளியான இறைவன் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதேபோல் அன்னபூரணி படமும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











