இதுவரை நடிகர்கள் மட்டுமே செய்ததை இப்போது நயன்தாரா செய்துவிட்டார்…!

கோலமாவு கோகிலா திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

Recommended Video

Kolamavu Kokila First Day Collection | கோலமாவு கோகிலா முதல் நாள் வசூல்

சென்னை: நேற்று ரிலீஸ் ஆன கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகை நயன்தாரா புதிய சாதனை படைத்துள்ளார்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் நயன்தாராவின் கோலமாவு கோகிலா நேற்று ரிலீஸ் ஆனது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எட்டு திசையிலிருந்தும் நற்செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

Nayanthara new record!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், யோகிபாபு நயன்தாரா நடித்துள்ள படம் மிகச்சிறந்த நகைச்சுவைத் திரைப்படமாக வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய ஹீரோக்களுக்கு நிகரானா ஓபனிங் நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது. மேலும், இதுவரை எந்த நடிகையின் திரைப்படமும் முதல் நாள் காலைக்காட்சியில் திரையிடப்பட்டதில்லை.

அந்த புதிய அத்தியாயத்தை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா துவக்கி வைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் எட்டு மணி காட்சியில் கோலமாவு கோகிலா திரையிடப்பட்டது. இதற்கு முன்பு அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம் 2 திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.லைகா புரடொக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X