»   »  'டிக் டிக் டிக்'... நயன்தாரா படத்திற்கு கமல் படத்தலைப்பு?

'டிக் டிக் டிக்'... நயன்தாரா படத்திற்கு கமல் படத்தலைப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் அடுத்த படத்திற்கு 'டிக் டிக் டிக்' எனப் பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'நானும் ரவுடிதான்', 'மாயா', 'தனி ஒருவன்' என கடந்தாண்டில் நயன்தாரா நடித்த படங்கள் தொடர் ஹிட்டடித்தன.

இதனால் தமிழின் நம்பர் 1 நடிகை என்ற பட்டம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு, திருநாள் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Nayanthara Next Film Title Tik Tik Tik

தற்போது கஷ்மோரா, இருமுகன் போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார்.இந்நிலையில் 'மாயா' போன்று மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டிருக்கிறார்.

சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கும் இப்படத்திற்கு 'டிக் டிக் டிக்' என பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1981 ம் ஆண்டு கமல்-மாதவி நடிப்பில் 'டிக் டிக் டிக்' படம் வெளியானது.இப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார்.

படத்தில் நயன்தாரா பயன்படுத்தும் கார் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறதாம். இந்த காருக்குள் பேய் புகுந்து அதனால் ஏற்படும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாம்.

'டிக் டிக் டிக்' படம் வெளியாகி 35 வருடங்கள் கடந்த நிலையில், நயன்தாரா படத்திற்கு இத்தலைப்பு வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் படத்தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources Said Nayanathara's Next Movie Title Tik Tik Tik.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil