நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.. பிரபலம் பகிர்ந்த பகீர் தகவல்!
சென்னை : நடிகை நயன்தாரா தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துள்ளார்
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் தடத்தை பதிக்க உள்ளார்
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா மிக விரைவிலேயே திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில் நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என பிரபல நடிகர் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்துக்கு ஜோடியாக
சந்திரமுகி, தர்பார் படங்களை தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கும் புதிய படத்திலும் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றன.

பாராட்டைப் பெற்றது
ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருவதும் கதைகளிலும் நயன்தாரா நடித்து வர அந்தப் படங்களும் வசூலில் ஹீரோக்களின் படங்களுக்கு இணையாக சாதனை செய்து வருகிறது அந்த வகையில் பிரபல கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான நெற்றிக்கண் படத்தில் நயன்தாரா பார்வை பறிபோன பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார் வித்தியாசமான திரில்லர் கதை களத்தில் வெளியான நெற்றிக்கண் ஆல் சென்டர்களிலும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது

பாலிவுட்டையும் கலக்க
இவ்வாறு தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மிக விரைவிலேயே பாலிவுட்டையும் கலக்க உள்ளார். விஜய் உடன் இணைந்து தெறி,மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் அட்லி அடுத்து ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதன் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டுள்ளது

முக்கோண காதல்
நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் ரிலீசுக்கு தயாராக உள்ளது. நானும் ரவுடிதான் மாபெரும் வெற்றி பெற்றது அந்த படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதியின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்கும். இப்பொழுது இந்த ஜோடி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். கூடுதலாக இந்த படத்தில் சமந்தாவும் நடிப்பதால் முக்கோண காதல் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது
நானும் ரவுடிதான் படத்தில் பணியாற்றியபோது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டு மிக விரைவிலேயே திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் ஆனாலும் நயன்தாரா குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டார் வாடகை தாய் மூலமாக மட்டுமே அவர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார். ஏனென்றால் ஏற்கனவே மிக பிஸியாக நடித்து நம்பர் ஒன் நடிகை என்ற இடத்தை பிடித்துள்ள நயன்தாரா இதற்காக பத்து மாதம் இடைவெளி விட்டால் தனது நம்பர் ஒன் இடம் பறிபோய்விடுமோ என வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதாக பிரபல நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவலை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











