விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம்.. எல்லோரும் என்ன சொன்னாங்க தெரியுமா?.. நயன்தாரா ஓபன்
சென்னை: நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு மகன்களை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட நயன் தற்போதும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக டாக்சிக், மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நயன்தாரா தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்தார். அவர் தன்னுடைய கரியரின் உச்சத்தில் இருக்கும்போது சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து பிரேக்கப் செய்தார். இரண்டு காதல்கள் அடுத்தடுத்து உடைந்து போனதால் சிங்கிளாகத்தான் காலம் முழுக்க இருப்பாரோ என்று அனைவருமே கருதினார்க்ள். அப்படிப்பட்ட நிலைமையில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்கள் லிவிங்கில் இருந்த அவர்கள் திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார்கள்.

திருமணம் செய்துகொண்ட ஜோடி: அதன்படி சில வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் தொடங்கி கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை ஏராளமானோர் வந்திருந்தார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனாதை குழந்தைகளுக்கு அந்தத் தம்பதி அன்றைய தினம் உணவும் வழங்கியது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தது.
திருமணத்துக்கு பின்பும் சர்ச்சை: விக்னேஷ் சிவனை திருமணம் செய்த கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார் நயன். அது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அதிகாரிகள் விசாரணை நடத்தி எந்த விதிமீறலும் இல்லை என்று உறுதி செய்த பிறகுதான் அது அடங்கியது. இரண்டு மகன்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷும் முழுக்க முழுக்க சப்போர்ட் செய்துவருகிறார்.
நடிப்பிலும் பிஸி: திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டதால் நடிப்பிலிருந்து விலகுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன். அவர் கையில் இப்போது டாக்சிக், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. முக்கியமாக டாக்சிக் திரைப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியது தொடர்பாக சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் பேசியிருப்பது திடீரென ட்ரெண்டாகியுள்ளது.
நயனின் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடலாம் என நான் முடிவு செய்தபோது எல்லோரும் என்னிடம் வந்து, 'ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள்?. தொடர்ந்து இனிமேல் அதற்கு மட்டும்தான் அழைப்பார்கள் என கூறினார்கள். ஆனால் நானோ ஸ்பெஷல் பாடல் என்றால் ஸ்பெஷல் விஷயம்தானே. ஏதோ ஒரு இமேஜ் இருப்பதால் மட்டும்தானே என்னை அழைப்பார்கள். அதன் மூலமும் சில விஷயங்கள் கற்றுக்கொள்ளலாம். நான் ஆடிய இரண்டு பாடல்களுமே எனக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications















