ரவுடி பிக்சர்சின் அடுத்த ப்ராஜக்ட்... நாளை அறிவிப்பு... நயன் அப்டேட்!

சென்னை : நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

இதன்மூலம் தரமணி உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ரவுடி பிக்சர்சின் முக்கிய அறிவிப்பை நாளை அறிவிக்க உள்ளதாக நடிகை நயனதாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா

நடிகை நயன்தாரா சிறப்பான படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய மொழிப் படங்களில் அசைக்க முடியாத நடிகையாக லேடி சூப்பர்ஸ்டாராக இவர் விளங்கி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இவர் உள்ளார்.

ரவுடி பிக்சர்ஸ்

ரவுடி பிக்சர்ஸ்

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தை துவங்கி சிறப்பான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகின்றனர். தரமணி, என்னை நோக்கி பாயும் தோட்டா, ராக்கி உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து கூழாங்கல் படத்திற்கு விருதையும் கைப்பற்றியுள்ளனர்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்

இந்நிலையில் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் தயாரித்துள்ளனர். விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது. படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். படத்தின் பாடல் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

நாளை அடுத்த அறிவிப்பு

நாளை அடுத்த அறிவிப்பு

இந்நிலையில் ரவுடி பிக்சர்சின் அடுத்தக்கட்ட அறிவிப்பை நாளைய தினம் வெளியிட உள்ளதாக நடிகை நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில படங்களை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது.

விக்னேஷ் சிவன் அறிவிப்பு

விக்னேஷ் சிவன் அறிவிப்பு

இதேபோல இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில் அனைவரது ஆசிர்வாதங்களுடன் உயரே பறந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் நாளைய தினம் 10 மணியளவில் ரவுடி பிக்சர்சின் புதிய ப்ராஜக்ட்டிற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவரும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X