சரி என்று நினைத்தேன்.. பிரபுதேவாவை காதலித்ததற்கு காரணம் இதுதானா?.. ஓபனாக பேசிய நயன்தாரா
சென்னை: நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக தமிழில் அன்னபூரணி, ஹிந்தியில் ஜவான் படம் வெளியானது. இரண்டு படங்களில் ஜவான் மெகா ஹிட்டானது. அன்னபூரணி சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கேரளாவில் பிறந்து திரையுலகில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமானவர் நயன்தாரா. ஐயா படத்தில் அறிமுகமான அவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து மேற்கொண்டு ஃபேமஸ் ஆனார். தொடர்ந்து படங்களில் கமிட்டான அவர் சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தபோது இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. மேலும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அவர்களின் காதல் பாதியிலேயே முடிந்தது.

பிஸியான நடிகை: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு தொடர்ந்து பிஸியாக நடித்துவந்தார். இந்த சமயத்தில் விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்தார். அந்தப் படத்தை பிரபுதேவா இயக்கினார். அந்தப் படத்தின்போது பிரபுதேவாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. நயனுடனான காதலுக்காக தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்தும் செய்தார் பிரபு. திருமணமானவரின் வாழ்க்கைக்குள் புகுந்து அவர்களது குடும்பத்தை நயன் நாசம் செய்துவிட்டார் என்று அவர் மீது விமர்சன கற்கள் வீசப்பட்டன.
பிரிந்த ஜோடி: இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்கள். அதேபோல் பிரபுவுடனான ரிலேஷன்ஷிப்பின்போதுதான் நயன் சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை பிரபுதேவா - நயன் காதலும் பாதியில் முடிந்தது. அதற்கு பிறகு சினிமாவிலிருந்து பெரிய பிரேக் எடுத்த அவர்; மீண்டும் நடிக்க வந்து விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற மகன்கள் இருக்கிறார்கள்.
சர்ச்சையில் நயன்: திருமணத்துக்கு பிறகு எந்தப் பிரச்னையிலும் சிக்காமல் இருந்த நயன்; தனது ஆவணப் படத்தால் தனுஷுடன் எழுந்த மோதல் காரணமாக மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அந்தப் பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கிடையே ஆவணப் படத்தில் பேசியபோது பிரபுதேவா பற்றி மறைமுகமாக பேசியிருந்த அவர், 'சினிமாவிலிருந்து நான் ஒதுங்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டேன். அந்த சமயத்தில் அது எனக்கு சரி என்று பட்டதால் அந்த முடிவுக்கு ஒத்துக்கொண்டேன்'’என்று கூறினார்.
மீண்டும் பிரபுதேவா: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆங்கில யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "சினிமா துறையில் இரண்டாம் திருமணங்களை நிறைய பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் நான் தவறு என்றும் சொல்லவில்லை. சினிமா துறை அப்படித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் அப்படிப்பட்ட உறவுகள் எல்லாம் சரியானதுதான் என்று நான் அப்போது நினைத்திருந்தேன். அதுதான் எனது நிலைப்பாடாகவும் இருந்தது"”என்றார்.


Click it and Unblock the Notifications











