தமிழில் நயன்தாரா நடிக்கும் புதிய திகில் படம்!
நயன்தாரா மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேபோகிறது. புதிதாக படம் இயக்க வருபவர்களுக்கும் அவர்தான் முதல் தெரிவாக இருக்கிறார்.
ஏற்கெனவே தமிழில் நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, ஐந்தாவதாக ஒரு திகில் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
நண்பேன்டா, இது நம்ம ஆளு, தனி ஒருவன் ஆகிய படங்களில் நடித்து வரும் நயன்தாரா, அடுத்து சூர்யா ஜோடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார்.
அடுத்து ஒரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை இயக்குபவர் புதிய இயக்குநர் அஸ்வின்.
திகில் கதை, குறுகிய காலத்தில் படப்பிடிப்பு என்பதால், மொத்தமாக தேதிகளைத் தந்துள்ளாராம் இந்தப் படத்துக்கு.
தான் நடிக்கும் முதல் திகில் படம் என்பதால், நயன்தாரா இந்தப் படத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறாராம்.
இந்தப் படத்தில் நயன்தாராவுடன் முக்கிய வேடத்தில் நெடுஞ்சாலை படத்தில் நடித்த ஆரி நடிக்கிறார். யுத்தம் செய் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சத்யா கேமராவைக் கையாள்கிறார்.


Click it and Unblock the Notifications












