விக்னேஷ் சிவன் மீது ஏறி நயன்தாரா கொடுத்த போஸ்.. அந்த பிரச்னைக்கு ஒருவழியா எண்ட் கார்டு போட்டுட்டாரு!
சென்னை: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் குறித்து நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு டெலிட் செய்துவிட்டார் என வதந்திகள் பரவிய நிலையில், எங்களைப் பற்றிய செய்திகளை இப்படித்தான் பார்க்கிறோம் என விக்னேஷ் சிவன் முதுகின் மேல் அமர்ந்துக் கொண்டு பார்ப்பது போன்ற புகைப்படத்தை நயன்தாரா ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், சூர்யா, விஜய் சேதுபதி, ஷாலினி என ஏகப்பட்ட திரையுலக பிரபலங்கள் சூழ திருமணம் நடைபெற்றது.

வாடகைத் தாய் மூலமாக 4 மாதங்களில் நயன்தாரா திருமணத்தை முடித்த கையோடு ட்வின்ஸ் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், ஒவ்வொரு முறையும் தங்களுக்கு எதிராக பரவும் நெகட்டிவிட்டியை பாசிட்டிவாகவே இருவரும் கடந்து வருகின்றனர்.
சொதப்பிய படங்கள்: அஜித் குமாரின் 62வது படம் விக்னேஷ் சிவன் கையை விட்டு சென்ற நிலையில், அடுத்ததாக அவர் பிரதீப் ரங்கநாதனை வைத்து ஆரம்பித்த எல்ஐகே திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் உள்ளது. கூடிய சீக்கிரமே அந்த படம் வெளியாகிவிடும் என அறிவித்துள்ளனர். நயன்தாரா நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக பெரிதாக படங்கள் வெளியாகவில்லை. அன்னபூரணி, ஓடிடியில் வெளியான டெஸ்ட் படங்களும் தோல்வியை தழுவியதால் ரொம்பவே அப்செட் ஆகியிருந்தார்.
மூக்குத்தி அம்மன் 2: ஆனாலும், நயன்தாராவுக்கு யஷ்ஷின் டாக்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரம், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படம் என தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. தமிழில் 100 கோடி பட்ஜெட்டில் சுந்தர். சி இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். பொள்ளாச்சியில் அந்த படம் உருவாகி வருகிறது.
விவாகரத்து வதந்தி: நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் விக்னேஷ் சிவன் குறித்து ஒரு போஸ்ட் போட்டு டெலிட் செய்துவிட்டதாகவும் அதில், முட்டாள் கணவனை திருமணம் செய்துக் கொண்டு கஷ்டப்படுவதாகவும் பதிவிட்டு இருந்தார் என வதந்திகள் உலாவின. இந்நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் மீது ஏறி அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து அனைவரின் வாயையும் அடைத்திருக்கிறார் நயன்தாரா.
லூப்பி நியூஸ்: எங்களை பற்றிய லூப்பி (பைத்தியக்காரத்தனமான) செய்திகள் பரவி வருவதை பார்க்கும் போது எங்கள் இருவரது ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். தற்போது சோஷியல் மீடியாவில் அது வைரலாகி வருகிறது. விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் நானும் ரவுடி தான் பட ஷூட்டிங்கின் போது காதலிக்கத் தொடங்கிய நிலையில், அப்போதே ரெஜிஸ்டர் மேரேஜும் செய்துக் கொண்டோம் என்று வாடகைத் தாய் விவகாரத்தின் போது தெரிவித்திருந்தனர். பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்ட பின்னரே அதிகாரப்பூர்வமாக ஊரைக் கூட்டி திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் முடிந்த உடனே கணவருடன் வெளிநாடுகளுக்கு ரொமான்டிக் டூர் சென்று வரும் நயன்தாராவை சுற்றி தேவையற்ற வதந்திகளை சிலர் வேண்டுமென்றே கிளப்பி வருவதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











