அடேங்கப்பா நயன்தாரா இத்தனை கண்டிஷன்கள் போடுறாரா?.. வேற ரூட்ல போய்ட்ருக்காங்கப்பா
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் நயன்தாரா குறித்து இப்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து ஹிட் படங்களாக அமைந்தன. மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார் நயன்.

இரண்டாவது இன்னிங்ஸ்: தொடர்ந்து சில பிரச்னைகளை சந்தித்த அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார். அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இதிலும் உதாரணம்தான்: நடிகைகளுக்கு திருமணமானாலே சினிமாவிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள் என்ற விதி காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் உடைத்து திருமணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என தற்கால நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருக்கிறார் நயன்தாரா. ஹிந்தியில் அவர் நடித்த ஜவான் படம் மெகா ஹிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி பக்கம் நயன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.
பிஸியானாலும் அம்மாதான்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அது அவரது 75ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் அவர் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதேபோல் மலையாளத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்தாலும் தனது மகன்கள், கணவருடன் நேரம் செலவழிப்பதில் கவனமாக இருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸை அள்ளுவதும் வழக்கம்.
அஜித்துடன் ஜோடி?: கடந்த சில நாட்களாக நயன்தாராவை பற்றி ஒரு தகவல் ஓடுகிறது. அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் ஸ்ரீலீலா மட்டுமின்றி நயன்தாராவும் ஜோடியாக நடிக்கிறார் என்பதுதான் அது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் விக்னேஷ் சிவன் - அஜித் இணைவதாக இருந்த படம் ட்ராப்பானதால் அஜித் மீது நயன் வருத்தத்தில் இருப்பதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கண்டிஷன்கள்?: இந்நிலையில் நயன்தாரா குறித்து புதிய தகவல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதன்படி, தனது வீட்டிலிருந்து 20 கி.மீட்டர் தொலைவில்தான் ஷூட்டிங் நடத்த வேண்டும், அப்படி நடத்தினாலும் காலை 11 மணிக்குத்தான் ஷூட்டிங் வருவேன், குழந்தைகளையும் உடன் அழைத்து வருவேன் போன்ற நிபந்தனைகளை விதித்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











