நயன்தாராவை சுற்றி அடிக்கும் பிரச்னைகள், விமர்சனங்கள்.. ஈகோவை தூக்கி வீசிட்டாரா?.. இவ்வளவு மாற்றமா?
சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்திருந்த அப்படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அடுத்ததாக நயனின் நடிப்பில் மண்ணாங்கட்டி, ராக்காயி, டாக்ஸிக் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன.மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கும், சுந்தருக்கும் பிரச்னை வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக கலக்கிவருகிறார் நயன்தாரா. அவரது கரியரில் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்துவந்தது மட்டுமின்றி கடுமையான விமர்சனங்களையும், தனி நபர் தாக்குதலையும்கூட சந்தித்திருக்கிறார். முக்கியமாக சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோரை காதலித்த நேரத்தில் மிகப்பெரிய ஏச்சுக்களை அவர் சம்பாதித்தார். இருப்பினும் அவர் அதைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் தனது கரியரில் முழு கவனத்தையும் செலுத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்து பின்னர் நடிக்க வந்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள். இந்த விவகாரத்திலும் நயன் மீது கடும் சொற்கள் வீசப்பட்டன.

அடுத்தடுத்து பிரச்னைகள்: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கரியரிலும் பிரச்னைகள் வர தொடங்கின. அந்தவகையில் தன்னை பற்றிய ஆவணப் படம் ஒன்றுக்காக தனுஷுடன் மோதினார். அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் அளித்த ஒரு பேட்டியில் பத்திரிகையாளர்கள் மூன்று பேர் பற்றி பேசியது, சந்திரமுகி படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தெரியாது என கூறியதென தொடர்ந்து சர்ச்சைகளிலும் பிரச்னைகளிலும் சிக்க ஆரம்பித்தார்.
மீனாவை அவமதித்த நயன்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் சுந்தர். சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தின் பூஜை படு பிரமாண்டமாக கடந்த மாதம் நடந்தது. இதில் நயனுடன் மீனா, குஷ்பூ, ரெஜினா, டிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டார். அப்போது மீனாவை நயன் அவமதித்துவிட்டதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அதுமட்டுமின்றி மீனா போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மறைமுகமாக நயன்தாராதான் தாக்கப்பட்டிருக்கிறார் என்றும் ரசிகர்கள் கருத்து கூற ஆரம்பித்தார்கள்.
சுந்தர். சியுடன் மோதல்: மேலும் மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் உதவி இயக்குநர் ஒருவரை நயன் திட்டிவிட்டதாகவும்; அதனால் கடுப்பான சுந்தர். சி நயனுக்கு ரெய்டு விட்டதாக்வும் ஒரு பேச்சு ஓடியது. முக்கியமாக அந்த மோதல் முற்றியதால் படத்திலிருந்து நயனை இயக்குநர் தூக்கிவிட்டார் என்றும் தகவல்கள் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் நயன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
என்ன தகவல்?: அதாவது தன்னை பற்றி தொடர்ந்து வரும் விமர்சனங்கள், சர்ச்சைகளுக்கு தனது செயலால் பதிலடி கொடுக்க முடிவு செய்திருக்கிறாராம் அவர். அதன்படி தான் பங்கேற்கும் ஷூட்டிங்கில் தனக்கான ஷாட் முடிந்தாலும் கேரவனுக்கு செல்லாமல் யூனிட் ஆட்களுடன் அமர்ந்து ஜாலியாக அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதாகவும்; அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications