அதே டெய்லர் அதே வாடகை.. டிரெஸ் கலரை கூட மாத்தமாட்டாங்களா.. கீர்த்தி சுரேஷ் முதல் நயன்தாரா வரை!
சென்னை: ஏற்கனவே இந்திய சினிமாவில் ஹீரோக்கள் கத்தியை தூக்கிக் கொண்டு தலையை ரோலக்ஸ் போல துண்டாக வெட்டுவது தான் ஆக்ஷன் படத்துக்கான முக்கிய அம்சம் என நினைத்து கிரிஞ்ச் செய்துக் கொண்டிருக்கும் நிலையில், ஹீரோயின்கள் தற்போது கத்தியை தூக்கிக் கொண்டு காட்டி, ராக்காயி என கிளம்பியிருப்பதை பார்த்து ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.
கமர்ஷியல் படமாக இருந்தாலும் அதிலும் ஒரு நல்ல கதை தேவை என்றும் ஆக்ஷன் காட்சிக்கான கன்டென்ட் ரொம்பவே முக்கியம். ஜாக்கி சான் எல்லாம் ஆக்ஷன் காட்சிகளையே காமெடி சீன்களை போல ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து வந்தார்.

ஆனால், கழுத்தை அறுப்பது, கத்தியை தூக்கிக் கொண்டு குத்துவது, லிட்டர் கணக்கில் போலி ரத்தம் ஊற்றுவது தான் ஆக்ஷன் படமா? என நயன்தாராவின் லேட்டஸ்ட் ராக்காயி டீசரை பார்த்த நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
அரைத்த மாவை அரைப்போமா: ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் ஆக்ஷன் படங்களில் நடித்து அட்டகாசம் செய்து வருகின்றனர். வித்தியாசமான திரைக்கதையை நோக்கி நடிகர்கள் மற்றும் நடிகைகள் இயக்குநர்களை புஷ் செய்தால் தான் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்களை கடத்தும் படங்கள் கிடைக்கும். ஆனால், இங்கே ஆக்ஷன் கமர்ஷியல் மசாலா படங்கள் வருடத்துக்கு 300 படங்களில் 250 படங்களுக்கும் மேல் அதே கதை தான் வந்து ரசிகர்களை டார்ச்சர் செய்து வருகின்றன.

கீர்த்தி சுரேஷ் முதல் நயன்தாரா வரை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் சாணிக் காயிதம் படத்தில் ஆக்ரோஷமான பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார். ஆனால், அந்த படமே ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. பிரியங்கா மோகன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கேப்டன் மில்லரில் இந்த ஆண்டு சுட்டதை எல்லாம் வேறலெவலில் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், புதிதாக அனுஷ்கா காட்டி என்கிற படத்தில் கழுத்தை அறுத்துக் கொண்டும் நயன்தாரா அதே டிசைன் சேலையை கட்டிக் கொண்டு தற்போது ராக்காயி ஆக மாறியிருப்பதை பார்த்து ஏகப்பட்ட ட்ரோல்களும் மீம்களும் குவிந்து வருகின்றன.
அதே டெய்லர் அதே வாடகை: பழைய புடவையை கட்டிக் கொண்டு நடிகைகள் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க கிளம்பியுள்ள நிலையில், அதே டெய்லர் அதே வாடகை என பரிதாபங்கள் தீபாவளி பாவங்கள் வீடியோவை எல்லாம் போட்டு சோஷியல் மீடியாவில் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அனைத்து நடிகைகளும் ஒரே மாதிரியான உடை மற்றும் கெட்டப்பை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து நடிக்கலாமா? என்றும் கேட்டு வருகின்றனர்.
பரத நாட்டியம் ஆடுறாரு நயன்: சண்டை போட சொன்னா நயன்தாரா பரத நாட்டியம் ஆடுறாரு என்றும் ஜெயிலர் படத்தில் ரஜினி சொல்வது போல ரியலாவே இல்லையே என ஏகப்பட்ட மீம்களை நேற்று வெளியான நயன்தாராவின் ராக்காயி டீசரை ட்ரோல் செய்யும் விதமாக பதிவிட்டு வருகின்றனர்.
தொடர் தோல்வி: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உமன் சென்ட்ரிக் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். மாயா, அறம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரியளவில் கைகொடுத்தன. ஆனால், டோரா, ஐரா, நெற்றிக்கண், கனெக்ட், ஓ2, அன்னபூரணி உள்ளிட்ட படங்கள் பெரிதாக கைகொடுக்கவில்லை. மேலும், டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி படங்கள் அவர் நடிப்பில் வர காத்திருக்கின்றன. இந்நிலையில், புதிதாக ராக்காயி படத்திலும் நயன்தாரா ஆக்ஷன் ஹீரோயினாக அதிரடி காட்டவுள்ளார்.


Click it and Unblock the Notifications











