திருமணம் பற்றிய கேள்வி.. நயனின் அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் விக்கி.. பிகில் ஊதலாமா வேணாமா?

தனது திருமணம் விரைவில் நடைபெறும் என சிரிப்பின் மூலம் பதிலளித்தார் நடிகை நயன்தாரா.

Recommended Video

Nayanthara Vignesh Shivan in Tirupathi காதலியுடன் திருப்பதி சென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன்

திருப்பதி: தனது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நடிகை நயன்தாரா பதிலளித்துள்ளார்.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.

Nayanthara reaction for the question about her marriage

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஜோடியாக சென்று திருமலை ஏழுமலையானை வழிபட்டனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர்களுக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் சாமி பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

பின்னா், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கோயிலை விட்டு வெளியில் வந்தனர். அப்போது அவா்களைக் காண ரசிகா்கள் திரண்டதால் கோயில் முன் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் அவா்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே நயன்தாரா, விக்னேஷ் சிவன் வருகையை படம் பிடிக்க செய்தியாளர்களும் கோயில் முன் திரண்டிருந்தனர். அப்போது ஒரு செய்தியாளர், நயன்தாராவை பார்த்து எப்போது திருமணம் என கேட்டார். அதற்கு சிரிப்பை மட்டும் பதிலாக தந்து நயன்தாரா விடைபெற்றார்.

நயன்தாரா சிரித்ததற்கான காரணம், அவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்பதை தான் உணர்த்துகிறது என ஒரு சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்ற சிலரோ இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை தான் நயன்தாரா உணர்த்தி இருக்கிறார் என்கின்றனர். நயன்தாரா சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்பது அந்த திருப்பதி ஏழுமலையானுக்கு தான் வெளிச்சம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X