ரீல் காதலர் யோகி பாபுவுக்காக நயன்தாரா செய்த அரிய காரியம்
Recommended Video

சென்னை: தான் நடிக்கும் புதிய படத்தில் யோகி பாபுவை பரிந்துரை செய்துள்ளார் நயன்தாரா.
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோலமாவு கோகிலா. போதைப் பொருள் விற்கும் பெண்ணான நயன்தாராவை யோகி பாபு காதலிக்கிறார்.
நயன்தாராவை அவர் இம்பிரஸ் செய்ய முயன்ற விதம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

நயன்தாரா
நயன்தாராவுக்கு யோகி பாபு லவ்வரா, எல்லாம் நேரம்டா என்று ஒரு கூட்டம் சொன்னாலும், சுமார் மூஞ்சி குமார்களுக்கும் சூப்பர் பொண்ணு செட்டாகும்டா என்று சிலர் கூறுகிறார்கள்.

சர்ஜுன்
லட்சுமி குறும்படத்தை இயக்கிய சர்ஜுன் இயக்கத்தில் தற்போது நயன்தாரா நடித்து வருகிறார். படப்பிடிப்பு கடந்த 12ம் தேதி துவங்கியது. ஹீரோயினை சுற்றி நகரும் கதை கொண்ட படம்.

கதாபாத்திரம்
கோலமாவு கோகிலாவில் நடிப்பால் தன்னை இம்பிரஸ் செய்த யோகி பாபுவுக்கு நல்ல வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்குமாறு சர்ஜுனிடம் பரிந்துரை செய்துள்ளாராம் நயன்தாரா.

ஆச்சரியம்
யோகி பாபுவுக்கு நயன்தாரா பரிந்துரை செய்துள்ளது கோலிவுட்காரர்களை வியப்படைய வைத்துள்ளது. யோகி பாபுவோ மகிழ்ச்சியில் உள்ளார். வாழ்த்துக்கள் யோகி பாபு.


Click it and Unblock the Notifications











