Nayanthara: கவின் படத்திற்காக இறங்கிவந்த நயன்தாரா.. விரைவில் கவின் 08 பட சூட்டிங்!
சென்னை: நடிகர் கவின் டாடா, ஸ்டார் என அடுத்தடுத்த படங்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி பட நாயகனாக முன்னேற்றம் காட்டி வருகிறார். இந்நிலையில் கவின் 08 படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூறப்பட்டது.
கவின் 08 படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. சில சம்பள விவகாரங்களால் இந்த படம் துவங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு படம் மீண்டும் வேலைகளை துவங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகை நயன்தாரா: நடிகை நயன்தாரா 20 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்/ முன்னணி நடிகையாக ரஜினி, அஜித், விஜய் என பல நடிகர்களுடன் தமிழில் நடித்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டில் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியும் வருகிறார். இந்நிலையில் நடிகர் கவினுடன் அவரது கவின் 08 படத்தில் நடிகை நயன்தாரா இணைய உள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கவின் 08 படம்: சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அவருக்கு வசூலில் மிகச் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாக உள்ள கவின் 08 படம் தற்போது மீண்டும் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ள நிலையில் விஷ்ணு இடவன் இந்த படத்தை இயக்க உள்ளார். தன்னை விட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் கேரக்டரில் கவின் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.
நயன்தாரா சம்பள விவகாரம்: இந்த படத்தின் சூட்டிங் முன்னதாகவே துவங்கவிருந்த நிலையில் நடிகை நயன்தாராவின் சம்பளப் பிரச்சனை காரணமாக படம் கைவிடப்பட்டதாக தெரியவந்தது. முன்னதாக இந்த படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளமாக நயன்தாரா கேட்டதாகவும் ஆனால் தயாரிப்பாளர் லலித் குமார் கட்டுபடியாகாது என்று கூறி வேண்டுமானால் பத்து கோடி ரூபாய் கொடுக்கலாம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த படத்தையே லலித்குமார் டிராப் செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சில மாதங்கள் கடந்து நயன்தாரா தரப்பில் இருந்து 10 கோடி ரூபாய் சம்பளத்திற்கு ஓகே சொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
விரைவில் சூட்டிங் அப்டேட்: இதையடுத்து தற்போது கவின் 08 படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற கதைக்களங்கள் தமிழுக்கு புதிதில்லை. நயன்தாராவே இதுபோன்ற கதையில் சிம்புவுடன் இணைந்து வல்லவன் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் திரைக்கதையே படத்தின் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதில் விஷ்ணு இடவன் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும.


Click it and Unblock the Notifications











