க்ரித்தி ஷெட்டியா இது?.. பார்பி பொம்மை போல மாறிட்டாரே.. நயன்தாரா வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் இதோ!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் டுடே' பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் இருந்து க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிரதீப் ரங்கநாதன் ஃபர்ஸ்ட் லுக், எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது லுக் போஸ்டர் வெளியான நிலையில், அடுத்ததாக ஹீரோயினை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.

LIK Nayanthara Krithi Shetty

20 வயதே ஆன இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். இது எல்லாமே படம் முழுக்க இப்படியே வருமா? அல்லது ஒரு பாடல் காட்சியின் ஸ்டில்களா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

ஹாலிவுட் லெவல் மேக்கிங்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் கதையும் வித்தியாசமாகவே இருந்தது. இந்நிலையில், ஹாலிவுட் மேக்கிங்கில் வித்தியாசமான ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி வருகிறாரா? என்கிற ஆர்வம் தான் படத்தின் அப்டேட்கள் வெளியாகும் போதெல்லாம் ஏற்படுகிறது. கதாபாத்திரங்களின் தோற்றங்கள் எல்லாம் வித்தியாசமாக இருப்பது தான் அதற்கு காரணம். லவ் டுடே படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த படமும் வித்தியாசமான படமாக அமையும் என்றே தெரிகிறது.

LIK Nayanthara Krithi Shetty

நயன்தாரா வெளியிட்ட க்ரித்தி ஷெட்டி லுக்: இயக்குநர் விக்னேஷ் சிவனின் மனைவியும் நடிகையுமான நயன்தாரா தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். LIK படத்தில் க்ரித்தி ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'prettiest and most talented' நடிகை க்ரித்தி ஷெட்டி என்று நயன்தாராவே பாராட்டியுள்ளார்.

நடிகை க்ரித்தி ஷெட்டி: விஜய் சேதுபதிக்கு மகளாக தெலுங்கு படமான உப்பென்னா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த க்ரித்தி ஷெட்டி நானியின் ஷியாம் சிங்கா ராய், வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் வணங்கான் படத்தி்ல் நடித்த இவர், சூர்யா வெளியேறியதும் இவரும் வெளியேறிவிட்டார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடித்துள்ளார். கஸ்டடி படம் தமிழில் க்ரித்தி ஷெட்டிக்கு வெற்றியை கொடுக்காத நிலையில், இந்த படம் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LIK Nayanthara Krithi Shetty

ஜெயம் ரவி ஜோடி: பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்திலும் க்ரித்தி ஷெட்டி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் இவருடன் சேர்ந்து கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கபி நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X