என்னையா விமர்சிக்கிறீர்கள்?.. பதிலடி கொடுத்த நயன்தாரா.. தனுஷையும் டார்கெட் செஞ்சிட்டாரோ?

சென்னை: நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட் உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. ஒருபக்கம் நடிப்பில் பிஸியாக இருக்கும் அவர் இன்னொரு பக்கம் பிஸ்னெஸிலும் படு பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்தவகையில் தன்னுடைய பெமி 9 நாப்கின் நிறுவனத்தின் கொண்டாட்ட நிகழ்வில் நேற்று கலந்துகொண்ட நயன் பேசியிருக்கும் விஷயம் கோலிவுட்டில் புதிய விவாதங்களை கிளப்பி தனுஷ் ரசிகர்களை கொதிப்படைய செய்திருக்கிறது.

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட், மலையாளத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். சில வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்த அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்கிற மகன்கள் இருக்கிறார்கள்.

dhanush nayanthara


சர்ச்சைகளும், விமர்சனங்களும்: திருமணம் ஆனதிலிருந்து பெரும்பாலும் எந்தவிதமான சர்ச்சைகளிலும் விமர்சனங்களிலும் சிக்காமல் இருந்தார் அவர். ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை பற்றிய ஆவண படத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் அதற்கு தனுஷ் ஆரம்பத்திலேயே அனுமதி கொடுக்கவில்லை. இருந்தாலும் அந்த ஃபுட்டேஜுகள் பயன்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் தனுஷ்.

ரஜினியை தெரியாது: அதேபோல் அந்த விவகாரம் முடிந்த கையோடு தனியார் ஆங்கில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய நயன், மூன்று பத்திரிகையாளர்களை குரங்குகள் என்று கூறினார். மேலும் சந்திரமுகி படத்தில் நடித்தபோது ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார் என்று தனக்கு தெரியாது என்று கூறினார். இந்த இரண்டு விவகாரங்களும் தனுஷ் விஷயத்தை போலவே சர்ச்சைகளை கிளப்பின. ஆனால் இவையெல்லாம் குறித்து நயன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

பெமி 9: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தொழில்களிலும் பிஸியாக இருக்கிறார் நயன். பெமி 9 என்ற நாப்கின் தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியிருக்கிறார் அவர். அந்த நிறுவனத்தின் 2025ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வு மதுரையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நயன்தாரா சில விஷயங்களை பேசினார். அதாவது, 'நம்மை யார் கீழ்த்தரமாக பேசினாலும், நம்மிடம் கெட்டதாக நடந்துகொண்டாலும் மறுநாள் காலையில் எழுந்து நமது வேலையை ஒழுங்காக செய்தால் போதும் நம்மை யாராலும் கீழே இறக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள் கொதிப்பு: நயனின் இந்தப் பேச்சு கோலிவுட்டில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதாவது இந்தப் பேச்சின் மூலம் தனுஷையும், தன்னை விமர்சித்தவர்களையும் மறைமுகமாக சாடியிருக்கிறார் நயன். ஆனால் இதில் முரண் என்னவென்றால் அவரை யாருமே கீழ்த்தரமாக பேசவில்லை. அவர்தான் பத்திரிகையாளர்களை பேசினார். ரஜினியை மட்டம் தட்டினார். முக்கியமாக மிகச்சிறந்த நடிகரான தனுஷை தந்தை, அண்ணனால்தான் இந்த நிலைமையில் இருப்பதாக கூறினார். அதற்கும் தனுஷ் நாகரீகமாக அமைதி காத்தார். மேலும் அனுமதி மறுக்கப்பட்டபோதும் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜுகளை பயன்படுத்தினார். இப்படி பல விஷயங்களை தான் செய்துவிட்டு மற்றவர்களை சாடுவது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. நயனுக்கு வர வர என்ன ஆச்சுனே தெரியவில்லை என்று காட்டமாக கமெண்ட்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X