»   »  விஷாலுக்காக கொள்கையை தகர்க்கிறாரா நயன்தாரா?

விஷாலுக்காக கொள்கையை தகர்க்கிறாரா நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறி வரும் நயன்தாரா புதிய படம் ஒன்றில் விஷால் ஜோடியாக நடிக்கிறாராம்.

நயன்தாரா தற்போது இமைக்கா நொடிகள், அறம் மற்றும் கொலையுதிர் காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார்.

Nayanthara to romance Vishal?

பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளார் நயன். பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் மரத்தை சுற்றி பாட்டு பாடுவதோடு தனக்கு வேலை இருக்காது என்று நினைக்கிறார் நயன்தாரா.

இந்நிலையில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகுமாரை வைத்து பிரம்மன் படத்தை எடுத்த சாக்ரடீஸ் விஷாலை இயக்கும் படத்தில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்.

சாக்ரடீ்ஸ் விக்ரமை வைத்து படம் எடுப்பதாக இருந்தது. அந்த திட்டம் கைவிடப்பட்டதால் அவர் தற்போது விஷாலை இயக்குகிறார்.

English summary
According to reports, Naynathara is going to act as Vishal's lady love in an upcoming movie to be directed by Socrates.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil