அதிரடி ஆக்ஷன்... நயன்தாராவின் புதிய ஆசை!
அப்படி என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை.. நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கு இரண்டிலுமே இளம் நடிகர்களிடமிருந்து வாய்ப்புகள் வந்தவண்ணமுள்ளதாம்.
இதைப் பயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டும் நயன்தாரா, காதல், சோகம் எல்லாம் போதும்... இனி ஆக்ஷன் கதைகளுக்குத்தான் முன்னுரிமை எனக் கூற ஆரம்பித்துள்ளார்ம்.

அனுஷ்கா போல
சக நடிகையான அனுஷ்கா, வரலாற்று கதைகளில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி', பாகுபலி படங்களில் ராணி வேடத்தில் நடிக்கிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் பயிற்சிகள் எடுத்து ஆக்ஷனிலும் கலக்குகிறார்.

நானும் ஆக்ஷனில் இறங்குவேன்
நயன்தாராவுக்கும் வழக்கமான காதல் படங்களில் நடித்து அலுத்துவிட்டதாம். நல்ல ஆக்ஷன் படங்கள், தன் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க விரும்புகிறார்.

சரித்திர கதை இருக்கா?
தமிழ், தெலுங்கில் சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டுகிறாராம்.

இன்னும் மூன்று ஆண்டுகள்...
இப்போதைய நிலவரப்படி இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நயன்தாரா இதே இடத்தில் நீடிக்க வாய்ப்புள்ளது. அத்தனைப் படங்களைக் கையில் வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











