நயன்தாரா செய்யும் சமையல்.. விக்னேஷ் சிவன் செய்யும் சேட்டை என்ன தெரியுமா?.. இப்படியெல்லாமா இருப்பாங்க
சென்னை: நானும் ரௌடிதான் படத்தில் பணியாற்றியபோது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலிக்க தொடங்கி சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டார்கள். இரண்டு மகன்களை வாடகை தாய் மூலம் பெற்றுக்கொண்ட நயன் தற்போதும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நயன் செய்யும் சமையலை வைத்து விக்னேஷ் சிவன் செய்யும் செயலை இதில் பார்க்கலாம்.
சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து பிரேக்கப் செய்தவர் நயன்தாரா. இனி காலம் முழுக்க சிங்கிளாகத்தான் இருப்பாரோ என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் காதலிக்கும்போது ஒரே வீட்டில் 5 வருடங்கள்வரை லிவிங் டு கெதரில் இருந்தார்கள். அப்படி இருந்தது அவர்களுக்குள்ளான புரிதலை மேலும் வலுப்படுத்தியது.
திருமணம்: இந்த ரிலேஷன்ஷிப்பை திருமணத்துக்கு கொண்டு சென்றால் நீடிக்கும் என்ற நம்பிக்கை வந்த பிறகு சில வருடங்களுக்கு முன்பு மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் தொடங்கி கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்வரை ஏராளமானோர் வந்திருந்தார்கள். அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அனாதை குழந்தைகளுக்கு அந்தத் தம்பதி அன்றைய தினம் உணவும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வாடகை தாய் மூலம் குழந்தைகள்: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார் நயன். அது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு அதிகாரிகள் விசாரணை நடத்தி எந்த விதிமீறலும் இல்லை என்று உறுதி செய்த பிறகுதான் அது அடங்கியது. இரண்டு மகன்களையும் கண்ணும் கருத்துமாக பார்த்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷும் சப்போர்ட் செய்துவருகிறார்.
நடிப்பிலும் பிஸி: திருமணம் ஆகி குழந்தை பெற்றுக்கொண்டதால் நடிப்பிலிருந்து விலகுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன். அவர் கையில் இப்போது டாக்சிக், மண்ணாங்கட்டி, சிரஞ்சீவியுடன் ஒரு படம் ஆகியவை இருக்கின்றன. இந்நிலையில் அவர் செய்யும் சமையல் பற்றியு, விக்னேஷ் சிவன் செய்யும் செயல் பற்றியும் நடன அமைப்பாளரும், இயக்குநருமான சதீஷ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
சதீஷ் பேட்டி: அவர் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், "நயன்தாரா செய்யும் ரசம் ஸ்பெஷலானது. அவர் ரசம் வைத்து அதில் மீனை போட்டால் அந்த மீனுக்கு உயிரே வந்துவிடும். ஏனெனில் அந்த ரசம் அப்படி இருக்கும். வீட்டிலிருந்து சமைத்து நயன் எதாவது கொண்டுவந்தால் விக்னேஷ் சிவனோ, நயன் கொண்டு வந்த உணவு பொருட்களை எல்லாம் எடுத்து போட்டு அதில் ஒன்று செய்துகொண்டிருப்பார். அதுவும் பயங்கர டேஸ்ட்டா இருக்கும்.
நெய் ரோஸ்ட்டில் சர்க்கரை: நெய் ரோஸ்ட்டும், தேங்காய் சட்னியும் கொண்டு வந்தால்; அந்த ரோஸ்ட்டில் சட்னியை ஊற்றி அதில் சர்க்கரையை போட்டு உடைத்துவிடுவார். அதை கலந்து நம்மிடம் கொடுப்பார். இப்படி அங்கே இருக்கும் உணவை வைத்து அவர் ஒரு உணவு செய்வார்" என்றார். முன்னதாக விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐகே படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படமானது டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











