நயன் சேச்சியின் அதிரடி முடிவு கீர்த்திக்கு வசதியாப் போச்சு
சென்னை: நயன்தாரா தான் யாருக்கும் ஜோடியாக நடிப்பது இல்லை என்று எடுத்துள்ள முடிவால் கீர்த்தி சுரேஷுக்கு தான் லாபம்.
சீனியர் ஹீரோக்கள் முதல் இளம் ஹீரோக்கள் வரை அனைவரும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புகிறார்கள். ஆனால் நயன்தாராவோ நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார்.

யாருக்கும் ஜோடியாக நடித்து மரத்தை சுற்றி டூயட் பாட அவர் விரும்பவில்லை. நயனின் இந்த முடிவால் கீர்த்தி சுரேஷின் காட்டில் வாய்ப்பு மழை சோவென பெய்கிறது.
முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி சேரும் வாய்ப்பு கீர்த்திக்கு கிடைக்கிறது. நயன்தாராவின் இடத்தை பிடிக்க விரும்புகிறார் கீர்த்தி. அந்த இடத்திற்கு நான் வருவேன் காத்திருந்து பாருங்கள் என்று வேறு கூறியுள்ளார்.
தமிழில் கார்த்தி, சூர்யா மற்றும் விஷால் ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி. தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். விஜய்யுடன் அவர் நடித்துள்ள பைரவா பொங்கலுக்கு ரிலீஸாகிறது.


Click it and Unblock the Notifications











