அஜித்துக்காக இறங்கி வந்த நயன்தாரா: என்னவென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
Recommended Video

சென்னை: விஸ்வாசம் படத்தில் நடிக்க நயன்தாரா செய்த வேலையை பார்த்து கோலிவுட்காரர்களால் அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லை.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். இல்லை என்றால் ஹீரோயினை சுற்றி நகரும் கதைகளாக பார்த்து தேர்வு செய்கிறார்.
இந்நிலையில் அவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டது தான் பலரையும் வியக்க வைத்துள்ளது.

விஸ்வாசம்
விஸ்வாசம் படத்தில் அஜித் இருப்பதால் நயன்தாராவுக்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்காது என்று கூறப்படுகிறது. இது நன்றாக தெரிந்தும் கூட அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நயன்.

கதாபாத்திரம்
வழக்கமாக ஒரு இயக்குனர் தன்னை தேடி வந்தால் கதை, தன்னுடைய கதாபாத்திரம் என்று அனைத்து விபரங்களையும் கேட்டு அவை பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வார் நயன்தாரா. இதற்கிடையே தனது காதலர் விக்னேஷ் சிவனிடம் வேறு ஆலோசனை கேட்பாராம்.

அஜித்
விஸ்வாசம் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் சிவா கேட்டதும் சரி என்றாராம் நயன்தாரா. கதையை கேட்கவில்லையாம், அட தனது கதாபாத்திரம் என்னவென்று கூட கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

கோடிகள்
நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். ஆனால் சிவாவிடம் அவர் சம்பள விஷயத்தை பற்றி பேசவில்லையாம். டேட்ஸை கூட அட்ஜஸ்ட் செய்து கொடுப்பதாக தெரிவித்துள்ளார் நயன்தாரா.

வியப்பு
எனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று நயன்தாரா கூறுவது உண்டு. அஜித்தை பிடிக்கும் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு இறங்கி வரும் அளவுக்கு பிடிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. நயன்தாரா ஒரேயடியாக இறங்கி வந்துள்ளது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











