பர்ஸ்ட் கமலுக்காக... இப்போ அஜித்துக்காக... நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

அஜித், ரஜினிக்காக பொங்கல் ரிலீஸை விட்டு கொடுத்த நயன்தாரா- வீடியோ

சென்னை: விஸ்வாசம் படத்துக்காக நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தமிழில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தற்போது ஐரா என்ற படத்தில் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

Nayantharas Kolaiyuthir kaalam released postponed

இந்த படத்தை தவிர அஜித்துடன் விஸ்வாசம், கமலுடன் இந்தியன் - 2, தெலுங்கில் சிரஞ்ஜீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனுடன் ஜித்து ஜில்லாடி படத்திலும் அவர் நடிக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா ஏற்கனவே நடித்து முடித்துள்ள கொலையுதிர் காலம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 படங்களை இயக்கிய சக்ரி டோல்ட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே அஜித்தின் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதேபோல், ரஜினியின் பேட்ட திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் சேரும் என தெரிகிறது.

இதனால் நயன்தாராவின் கொலையுதிர் காலம் படம் பொங்கலுக்கு வெளியாவது கேள்விக்குறியாக இருக்கிறது. விஸ்வாசம் படம் ரிலீசான பிறகு கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட நயன்தாரா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரிலீஸ் கமலின் விஸ்வரூபம் 2 படத்துக்காக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

{document1}

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X