முதலில் அஜித், இப்போ ராம் சரண்: நயன்தாராவை புரிஞ்சுக்கவே முடியலையே
Recommended Video

சென்னை: நயன்தாராவின் சமீபத்திய நடவடிக்கைகளை பார்த்து பலரும் குழப்பத்தில் உள்ளனர்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார். பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்பதை தயாரிப்பாளர்களிடம் தெரிவித்துவிடுவார்.
அண்மையில் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறார்.

விஸ்வாசம்
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தான் நடிப்பேன் என்ற கொள்கையை தனக்கு மிகவும் பிடித்த நடிகரான அஜித்துக்காக தளர்த்திவிட்டு விஸ்வாசத்தில் நடித்தார். அந்த படம் ஹிட்டாகியுள்ளது.

நயன்தாரா
படத்தில் நடிப்பதோடு சரி, அதனை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ள மாட்டார். இந்நிலையில் சிரஞ்சீவியுடன் சேர்ந்து நடித்த சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

அஜித்
முதலில் அஜித்துக்காக ஒரு கொள்கையை தளர்த்திய நயன்தாரா தற்போது சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் தேஜாவுக்காக மற்றொரு கொள்கையை தளர்த்தியுள்ளார்.

விஜய்
ஹீரோவுடன் டூயட் பாடிவிட்டு போகும் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்து வந்த நயன்தாரா தற்போது தளபதி 63 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். விஜய்க்கு ஈடாக தனது கதாபாத்திரம் இருக்காது என்று தெரிந்தும் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இப்படி ரூட்டை மாற்றியுள்ளது ஏன் என்று பலருக்கும் புரியவில்லை.


Click it and Unblock the Notifications











